திருப்பூர்,டிச.1:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 24,44,929 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கடந்த 4ம் தேதி முதல் வழங்கப்பட்டது.
தற்போது படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் இணையவழியாக பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையே திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சௌடாம்பிகை நகர் மற்றும் பாண்டியன் நகர் மற்றும் அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் மனிஷ் ஆய்வு செய்தார்.

