திருப்பூர், டிச. 6: தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அவர்களது வாழ்வாதாரமும் உயா்ந்து வருகிறது. இந்த உதவிகள் பெற அடையாள அட்டை மிகவும் அவசியம். இதனை பெறும் வகையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் முலம் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி நேற்று நடந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுதல் ஊனம் சதவீதம் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மாற்றுத்திறனாளிகள் 100க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். இதில் அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டது.
+
Advertisement

