திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு 310 ஆண்டுகளை நிறைவு செய்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றாலே அனைவரின் நினைவில் வருவது லட்டு பிரசாதம். ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக திருமலைக்கு வருபவர்கள் லட்டு சுவைக்காமல் இருக்க முடியாது. பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் லட்டு வாங்கி வந்து சாப்பிடுகிறார்கள். திருப்பதி லட்டு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமானது.
அத்தகைய லட்டு நேற்றுடன் 310 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 310 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தனித்துவமானது.பிரசாதமாக லட்டு வழங்கும் முறை கடந்த 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. தற்போது தேவஸ்தானம் தினமும் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகளை தயாரித்து வருகிறது. 15ம் நூற்றாண்டில், பக்தர்களுக்கு வடை பிரசாதம் மட்டுமே வழங்கப்பட்டது.