சென்னை: திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி மரணம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி மரணம், தற்கொலை என அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. விசாரணை முடிந்த பிறகு, கொளத்தூர் துணை ஆணையர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கபப்டும். மத்திய குற்றப்பிரிவுக்கு புகார் வந்தால் முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்குப் பதியப்படும். நவீன் பொல்லினேனியை போன் மூலமாக யாரும் மிரட்டியதாக தகவல் வரவில்லை. தற்கொலை தூண்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறினார்
+
Advertisement


