Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அன்றாட பயன்பாட்டுக்கான குறிப்புகள்

நன்றி குங்குமம் தோழி

சேலை: கலர் சேலைகளை முதலில் உப்பு கலந்த நீரில் அலசி விட்டு பின்பு சோப்பு நீர் கொண்டு துவைத் தால் நிறம் மங்காது.

அரிசி: பூச்சி, வண்டு இவை வராமல் பாதுகாக்க அரிசி வைத்துள்ள பாத்திரத்தில் கொஞ்சம் வேப்பிலை போட்டு வைக்கவும்.

வெண்ணெய்: பாலை சிறு தீயில் காய்ச்சி பின்பு ஆற வைத்து மேலே அடை தங்கும் போது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். சில மணி நேரத்திற்கு பின்பு பாலிலிருந்து ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். இவ்வாறு சேகரித்த ஆடையை கடைந்து வெண்ணெய் எடுக்கலாம். மிக்சியிலும் அடிக்கலாம்.

துரு கறை: வெள்ளைப் பருத்தி அல்லது மற்ற ஆடைகளில் துரு கறை படிந்தால் எலுமிச்சை சாறு, உப்பு கலந்து அந்தப் பகுதியை துடைத்து வெயிலில் காய விடவும்.

கலப்பட தேன்: தண்ணீரில் இரண்டு சொட்டு தேனை விட்டால், அது தண்ணீரில் கலக்காமல் முத்து மாதிரி மிதந்தால், கலப்படமற்ற தேன்.

மருத்துவக் குறிப்புகள்: சீதபேதிக்கு புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் இவைகளை சம அளவு இடித்து விட்டு தூளாக்கி பசும் பாலில் கலந்து சாப்பிட சீதபேதி குணமாகிவிடும்.

வாய் திக்கல்: சிலருக்கு பேசும் போது திக்கும். அவர்கள் வில்வ இலை இரண்டை தினந்தோறும் காலைப் பொழுதில் மென்று வர நற்பலன் கிடைக்கும். இலந்தை இலை சாறும் குடிக்கலாம்.

மலச்சிக்கல்: வாரத்தில் ஒருநாள் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிடலாம். இரவில் மாம்பழம் சாப்பிட இதற்கு தீர்வு கிடைக்கும்.

பல்வலி, பல் கூச்சத்திற்கு: பல் வலிக்கு ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு மெல்லவும். பல் கூச்சத்திற்கு புளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை தூள், உப்பு சேர்த்து பல் துலக்கலாம்.

தலைவலி: அகத்தி இலைச்சாறு நெற்றியில் தடவலாம். ஒற்றைத் தலைவலியாக இருந்தால் எட்டி மரக் கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து தலைக்கு குளிக்கலாம். சுக்கை இடித்து நெற்றியில் பற்று போடலாம்.

நீர்கடுப்பு: நன்னாரி வேர் 5 கிராம் அரைத்து பசும் பாலில் கலந்துண்ண நீர் கடுப்பு அகன்று விடும்.

- கீதா சுப்பிரமணியன், கும்பகோணம்.