கோவில்பட்டி, ஆக. 3: கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து முடுக்கலான்குளம் கிராமத்திற்கு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கோவில்பட்டி மாதங்கோவில் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது கியர் போடும் ராடு திடீரென வேலை செய்யவில்லை. இதனால் பஸ் நடுரோட்டில் நின்றது. அரசு பஸ் டிரைவர் பழுதினை சரி செய்ய முயன்றும் முடியவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டதால் மாற்று பஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
நடுரோட்டில் நின்ற பஸ்சினை டிரைவர், கண்டக்டர் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தள்ளி ஓரமாக விட முயற்சி எடுத்த போதும், முடியவில்லை. இதையடுத்து அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து மெக்கானிக் வரவைக்கப்பட்டு பழுது நீக்கிய பிறகு பஸ் போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.