எட்டயபுரம், நவ.29: எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்களை சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார். மொத்தம் 90 மாணவ, மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிக்குமார், பள்ளி செயலாளர் ராம்குமார் ராஜா, நிர்வாக குழு உறுப்பினர் சந்திரன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதக்கண்ணன், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணை தலைவர் கதிர்வேல், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதிகணேசன், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, வார்டு செயலாளர்கள் மாரிக்கண்ணன், பிச்சை, சின்னப்பர், பச்சிராஜன். மேலும் அருள்சுந்தர், கவுன்சிலர் மணிகண்டன், புதூர் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் அக்ஷய், ஒன்றிய கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் கசவன்குன்று பாலமுருகன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மஞ்சமாதா, நகர மகளிர் அணி முருகலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
+
Advertisement

