வள்ளியூர்,நவ.28: வள்ளியூர் சாமியார் பொத்தையில் முத்துகிருஷ்ணசுவாமியின் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். முத்துகிருஷ்ணசுவாமி 112வது குருபூஜை வரும் டிச.19ம் தேதி நடைபெறவுள்ளது. முதல்நாளான டிச.19ம் தேதி காலையில் தீர்த்தவாரியும், அதனை தொடர்ந்து முத்துகிருஷ்ணசுவாமி மண்டபத்தில் விசேஷ பூஜை நடைபெறுகிறது. விழாவின் 30ம் தேதி குருபூஜையை முன்னிட்டு காலை 4 மணி முதல் கிரிவலம் நடைபெறும். அதனை தொடர்ந்து ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாதாஜி பூஜையுடன் தொடங்கும் விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் மணிகண்டன் லெட்சுமிநாராயணன் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடந்தது.
+
Advertisement

