விகேபுரம்,நவ.28: விகேபுரம் அருகேயுள்ள திருப்பதியாபுரத்தை சேர்ந்த மாடக்கண்ணு மகன் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டின் அருகே ராஜா நாகம் பதுங்கி இருப்பதாக பாபநாசம் வனச்சரகர் குணசீலன் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வன உயிரின காவலர் முத்துக்குமார், வன காவலர் அசோக்குமார் சூழல் காவலர்கள் மணிகண்டன் ஆசீர், மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து குமார் வீட்டில் பின்புறம் உள்ள காளியம்மன் கோயிலில் பதுங்கியிருந்த 13 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பத்திரமாக பிடித்து கோவில்தேரி பீட் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
+
Advertisement

