ஸ்பிக்நகர், டிச. 3: தூத்துக்குடி அடுத்த முள்ளக்காடு சந்தோஷம் நகரை சேர்ந்தவர் கருப்பையா மகன் காளிமுத்து(48). லாரி டிரைவரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும், இவரது மனைவி சித்ராவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே காளிமுத்து வீட்டின் படுக்கையறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார். மனைவி சித்ரா மற்றும் குழந்தைகள் ஹாலில் படுத்து உறங்கினர். காலையில் கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது படுக்கையறை மின்விசிறியில் காளிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

