சோளிங்கர் யோக நரசிம்மப் பெருமாள்
மானுடம் தன்னிடம் உள்ள குறைகளை களைவதற்கு இயற்கை கொடுத்த வரமே இறைவன். இறைவனிடம் உன் குறையை வை. மற்றவற்றை இறைவன் பார்த்துக் கொள்வான் என்பதுதான் சிந்தனை. மனிதனிடம் மனம் சில நல்ல கெட்ட குணங்கள் கொண்டவனாக உள்ளான். எப்பொழுது நல்லவனா இருப்பான் எப்பொழுது மாறுவான் என்பது தெரியாது. ஆனால், இறை சக்தி உனக்கு தேவைப்படுவதை கண்டிப்பாக கொடுக்கும் என்பதே நிச்சயம். அதுபோலவே, உன் குறைகளை தீர்க்கும் ஸ்தலங்களை அறிந்து அதற்கு தகுந்தாற் போன்ற கோயிலுக்குச் சென்றால் நிச்சயம் தீர்வு உண்டு என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு நமக்கு துணை நிற்பது கிரகங்களே. அவ்வாறே, சோளிங்கர் யோக நரசிம்மரை விரிவாகக் காண்போம்.
108 திவ்ய தேசங்களில் அறுபத்து ஐந்தாவது (65) திவ்ய தேசமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் யோக நரசிம்ம பெருமாள் உள்ளார். பக்த பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டி வசிஷ்டர், காசியப்பர், அத்ரி,ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர், விசுவாமித்திரர் ஆகிய சப்தரிஷிகளும் தவமிருந்த திருத்தலமாக இத்தலம் திகழ்கிறது. இங்குதான் விசுவாமித்திரரும் பிரம்மரிஷி பட்டம் பெற்றார் என்கிறது புராணம். சப்தரிஷிகளுக்கு காட்சி கொடுப்பதற்காகவே யோக நிலையில் காட்சி கொடுத்த தலமாகும். இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டில் பாராங்கச சோழனால் கட்டப்பட்டதால் சோழ சிம்மபுரம் என்று அழைக்கப்பட்டு பின் சோளிங்கபுரம் என்றானது.
தற்பொழுது சோளிங்கர் என அழைக்கப்படுகிறது. இந்த திருத்தலத்தில் சப்தரிஷிகளுக்கு இடையூறாக இருந்த அரக்கர்களை கொல்ல பெருமாள் ஹனுமனை அனுப்பினார். வெற்றி பெற முடியவில்லை எனவே, தன்னிடம் இருந்த சங்கு, சக்கரத்தை கொடுத்து அரக்கனை வதம் செய்தார். பின்பு ஹனுமனும் யோக நரசிம்மரை தரிசித்து பின்பு, இங்கு யோக ஆஞ்சநேயராக இருக்கிறார். இங்குள்ள யோக நரசிம்மருக்கு, சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் பெயர் கொடுக்கின்றன. இதில், சனி என்ற கிரகம் வலிமையாக உள்ளது. இங்கே இவரை பக்தவச்சலம் என்ற பெயரால் பரிபாலனம் செய்கிறார். சந்திரன் மற்றும் சனி கிரகம் நாமகரணமாகவும் உள்ளது. அமிர்தவல்லி தாயாருக்கு சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களே நாமகரணம் செய்கிறது.
செவ்வாய், சுக்ரன் பரிவர்த்தனை செய்தாலும் செவ்வாய் வீட்டில் சுக்ரன் இருந்தாலும் சுக்ரன் வீட்டில் செவ்வாய் இருந்தாலும் சூரியன், செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை பெற்றாலும் இக்கோயிலுக்கு சென்று படிக்கட்டு வழியே சென்று தேன், பால் மற்றும் பழம் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வந்தால் தனவரவு அதிகமாகும். தனவரவில் தடை ஏற்பட்டாலும் புனர்பூதோஷம் இருந்தாலும் நல்லெண்ணெய் மற்றும் பன்னீர் வாங்கி கொடுத்து வந்தால் புனர்பூ தோஷ நீங்கும் திருமணம் நடந்தேறும்.கேன்சர் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள்.
இக்கோயிலுக்குச் சென்று நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் வழிபட்டால் உளுந்து வடையும் தேனும் பன்னீரும் நெய்வேத்தியம் செய்து அங்குள்ள பக்தர்களுக்கு கொடுத்தால் கேன்சர் போன்ற குறைபாடுகளில் தீர்வு கொடுக்கும்.மேஷ லக்னத்திற்கு துலாம் பாவகத்தில் சுக்ரன் இருந்தால் காரகோ பாவ நாசம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இவ்வாறு அமைப்புள்ளவர்கள் கன்னிப் பெண்களுக்கு அமிர்தவல்லி அம்மையாக பாவித்து உணவு, உடை, ஆபரணங்கள் வாங்கி கொடுத்தால் திருமணம் நடந்தேறும். படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்தால் ஜாதகத்தில் உள்ள பல தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும் என்பதே சோளிங்கர் யோக நரசிம்மரின் தனிச்சிறப்பாகும்.
ஜோதிடர் திருநாவுக்கரசு