தஞ்சாவூர், ஆக. 13: தஞ்சாவூர் பெரிய கோவில் அருகில் உள்ள பொம்மைக் கடையில் தாயும் மகளும் பொம்மை திருடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோவில் அருகில் ஜெயக்குமார் என்பவர் பொம்மை கடை நடத்தி வருகிறார். இவர் தஞ்சை தலையாட்டி பொம்மை நடன பெண் பொம்மை உள்ளிட்ட பல வகையான பொம்மைகள் விற்பனை செய்கிறார்.
இவரது கடைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை, பொம்மை வாங்குவது போல் வந்த 2 பெண்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் ஷோ கேஸில் வைக்கப்பட்டு இருந்த பொம்மையை தாய், திருடி மகளிடம் வழங்கிய வீடியோ கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


