வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகின்றது. புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், அடுத்த மாதம் 5ம் தேதி அதிகாரபூர்வ அதிபராக பதவியேற்கிறார். அதிபராக இருக்கும் பைடனின் மகனான ஹண்டர் பைடன் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருத்தல் மற்றும் வரிக் குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். அவருக்கு அவருக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிபர் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது மகன் ஹண்டர் பைடன் மீதான குற்றச்சாட்டை மன்னிக்கிறேன். அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதிபருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தனது மகனை மன்னிப்பதாக அவர் அறிவித்துள்ளார். அதிகாரபூர்வ இந்த உத்தரவின் மூலம், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் மேற்கண்ட மன்னிப்பு உத்தரவை ரத்து செய்ய முடியாது.
Advertisement


