தஞ்சாவூர், நவ.27: தஞ்சையில் மோட்டார் சைக்கிளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஈசன் விடுதி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (46). இவர், நேற்று முன்தினம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார்.
அப்போது, தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அருகே உள்ள ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சென்றார். பின்னர், மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மருத்துவக் கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தஞ்சை நடுக்கடை பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் மகன் ஆஷிக் (31). அதே பகுதியை சேர்ந்த செல்லையா (51) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

