சென்னை: சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் அமைக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை உறுதி அளித்துள்ளது. சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் அமைக்கப்படும். பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணையில் உள்ளது; தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது எனவும் கூறியது. இந்து அறநிலையத் துறையின் வாதத்தை மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement