Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி

* திருத்தங்கள் செய்யவும் வாய்ப்பு

* தேர்தல் நடத்தும் அலுவலர் அழைப்பு

கரூர் : கருர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல் பேசுகையில்,கருர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி ஆகஸ்ட் 20ம்தேதி முதல் அக்டோபர் 18ம்தேதி வரை நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் வாக்காளர் படடியல் திருத்தும் பணி, நிலை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், வாக்காளர் விபரம் சரிபார்க்கப்பட்டும், வாக்குச்சாவடிகள் திருத்தி அமைக்கப்படும் மற்றும் மறுசீரமைக்கப்படும்.

வாக்காளர் ப்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்படும். வக்காளர் பட்டியல் மங்கலான, மோசமான தரமற்ற படங்களை மாற்றி நல்ல தரமான புகைப்படங்களை உறுதி செய்வதன் மூலம் புகைப்படத்தின் தரம் மேம்படுத்தப்படும். மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள பிரிவு மற்றும் பகுதிகள் மறுசீரமைக்கப்படும். இவற்றில் முதற்கட்டமாக, வீடு வீடாக சென்று வாக்காளர் விபரம் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 29ல் வெளியிடப்படும். திருத்தங்கள் இருப்பின் அக்டோபர் 29ம்தேதி முதல் நவம்பர் 28 வரை அவகாசம் வழங்கப்படும். டிசம்பர் 24ம்தேதிக்குள் கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்படும். 01.01.2025ம் நாளை தகுதி நாளாக கொண்டு 2025ம் ஆண்டு ஜனவரி 6ம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக இணைய வழி என்ற முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம். பட்டியலில் பெயர் சேர்க்கும் போது விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயதுக்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். முகவரி சான்றாக குடிநீர், மின்சாரம், காஸ் இணைப்பு, ஆதார் அட்டை, வங்கி அஞ்சலக கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், விவசாய அடையாள அட்டை, வாடகை குத்தகை பத்திரம், வீடு விற்பனை பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக அளிக்கலாம்.

25 வயதுக்கு உட்பட்டோர் வயது சான்று இணைப்பது கட்டாயம். தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட மேற்குறிப்பிட்ட பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும் என்றார்.இந்த கூட்டத்தில், கோட்டாட்சியர்கள் முகமது பைசல், தனலட்சுமி, மாநகராட்சி கமிஷனர் சுதா, நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, தேர்தல் தாசில்தார் முருகன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.