Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் அக்டோபர் 21ம் தேதி பட்டமளிப்பு விழா

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழா வருகிற அக்டோபர் 21ம் தேதி அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவுள்ளது. ஜூலை-2023, ஜனவரி-2024 ஆகிய பருவங்களில் முனைவர், ஆய்வியல் நிறைஞர், முதுநிலை, இளநிலை, பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் இந்தப் பட்டமளிப்பு பருவத்தில் பட்டம், பட்டயம் பெறத் தகுதியுடையவர்களாவர். தேர்வுக் கட்டணத்துடன் பட்டச் சான்றிதழுக்கான கட்டணத்தை செலுத்தியவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அவ்வாறு கட்டணம் செலுத்தாதவர்கள் www.thou.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று பட்டமளிப்பு விழா படிவத்தை நிரப்பி ரூ.750 கட்டணத்தை இணையவழியிலோ, நேரிலோ செலுத்தலாம்.

முனைவர் பட்டம் மற்றும் தரவரிசைப் பெற்ற ஆய்வியல் நிறைஞர், முதுநிலை இளநிலை, பட்டய மாணாக்கர்கள் மட்டுமே பட்டமளிப்பு விழாவில் நேரில் வருகைதந்து பட்டம், பட்டயம் பெற அனுமதிக்கப்படுவர். இம் மாணாக்கர்களுக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக தகவல் தெரிவிக்கப்படும். பிற மாணாக்கர்களுக்கு பட்ட, பட்டயச் சான்றிதழ்கள் அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கப்படும். மேலும் இதுதொடர்பான விவரங்களை 044- 24306665 என்ற எண்ணிலோ அல்லது www.tnou.ac.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.