ஸ்ரீபெரும்புதூர்: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலை உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் இயங்கும் தொழிற்சாலை வாகனங்கள், குன்றத்தூர் வழியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. தற்போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக இந்த சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பிலும், ஸ்ரீபெரும்புதூர் கோட்டை உதவி இயக்குநர் மகாலிங்கம் மேற்பார்வையிலும் ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் சேதமான பகுதிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement


