Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராசிகளின் ராஜ்யங்கள் விருச்சிகம்

விருச்சிகம் என்பது காலபுருஷ லக்னத்திற்கு எட்டாம் (8ம்) பாவகத்தை குறிக்கிறது. நீர் ராசியாக உள்ளது. இந்த ராசியை பலர் மர்ம ராசி என்றே சொல்வார்கள். காலபுருஷனுக்கு எட்டாம் பாவகத்தை மர்மம் என்றுதான் அைழக்க வேண்டும். என்ன செய்வார்கள்? என்ன சொல்லப் போகிறார்கள்? என்பதை யூகிக்க முடியாத ராசியாக உள்ளது. ஸ்திரமான ராசியாக உள்ளது. எதனையும் ஆய்ந்தறிந்து எந்தச் சலனமும் இல்லாமல் முடிவெடுக்கும் ராசியாகும். மேஷத்தின் செவ்வாயின் குணம் வெப்பமாக வேகமாக இருக்கும். ஆனால், விருச்சிகத்தில் உள்ள செவ்வாயின் குணம் நீர்த்தன்மை கொண்ட விஷமாக இருக்கும்.

விருச்சிக ராசியின் தன்மைகள்...

லத்தீன் மொழியில் ஸ்கார்பியோ என்றால் இறகுகள் கொண்ட நஞ்சுப் பாம்பு கொடி என்ற பொருளைத் தருகிறது. விருச்சிகத்திற்குள் வரும் சந்திரன் நீசம் பெறுகிறது. இதற்குள் வரும் ராகு உச்சம் பெறுகிறது. ஒரு விஷயத்தை இந்த ராசிக்காரர்கள் தீர்மானம் செய்துவிட்டால் முடிக்காமல் விடமாட்டார்கள். தாயின்மீது அதிக அன்பை வைத்திருப்பவர்கள். அவர்களுக்குகான இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சந்திரன் நீசம் பெறுவதனால் உணவுப் பிரியர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வெவ்வேறு வகையான உணவுகளை உண்பதில் ரசனை மிக்கவர்கள். அதனால் ஏற்படும் உபாதைகளையும் சுமந்து வாழ்பவர்கள். மிகவும் சுறுசுறுப்பானவர்கள் என்றும் சொல்ல வேண்டும். அதே சமயத்தில் அதற்கு நேர்மாறாக சோம்பேறித் தனத்தையும் கொண்டவர்கள். சிலர் தூக்கத்தை கலைப்பதற்கு சிரமப்படவேண்டும். அந்த அளவிற்கு தூங்குவார்கள்.

இதில் ஆளும் கிரகம் செவ்வாயாக இருக்கிறது. இந்த செவ்வாய்க் கிரகத்திற்கு இரண்டு நிலாக்கள் உண்டு. இந்த ராசியில் சந்திரன் செவ்வாய்இருக்கப் பெற்றவர்கள் மிகவும் யோகமானவர்கள். நீச பங்கம் ராஜயோகம் என்ற ஜோதிட விதியைக் கொண்டிருக்கும். இவர்கள் ஏராளமாக சர்வ சாதாரணமாக சம்பாதிக்கும் திறமை கொண்டவர்கள்.

சந்திரன் நீசம் பெறுவதால் மனத்தளவில் பயம் கொண்டவர்களாக இருப்பர். ஆனால், அந்த பயத்தை வெளியே தெரியாதவாறு தம்மை வெளிப்படுத்திக் கொள்வார்கள். அதிகமாக நீர் அருந்தக் கூடிய அமைப்பை பெற்றவராக

இருப்பார்கள்.

இந்த ராசியில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவெனில், நீர் தன்மை கொண்ட ராசியில் நீரின் காரகத்தன்மை கொண்ட சந்திரன் நீசமாக மாறுவதுதான்.

ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் எந்த நீர் நிலைகளிலும் இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வழுக்கி விழுதல், தண்ணீருக்குள் இழுத்துச் செல்லுதல் நிகழும்.

பௌர்ணமி யோகம் கொண்டவர்களாக இருந்தால் சில தோஷங்களில் இருந்து விலக்கு பெறுவார்கள்.

இந்த ராசிக்கு ஒரு குணமுண்டு அதாவது, இவர்களுக்கு சளித் தொந்தரவுகள் இருந்து கொண்டேயிருக்கும். இதற்கு காரணம் நீர் வீட்டில் நீருக்கான காரக கிரகமான சந்திரன் இருப்பது. சளியை உற்பத்தி செய்து சிலருக்கு குமட்டல், தலைவலி போன்றவைகளை ஏற்படுத்தும்.

விருச்சிக ராசியின் கதைகள்...

கிரேக்க புராணத்தில் பெரிய ராஜாவின் மகனாக ‘ஒரியன்’ இருக்கிறார். அவர் வேட்டையாடும் தொழிலைச் செய்துவருகிறார். தம்மால் மட்டுமே அனைத்தையும் வீழ்த்தமுடியும் என்ற நம்பிக்கையும் கர்வமும் அவருக்குள் நிரம்பிக் கிடக்கிறது.

இந்த கர்வத்தை அறிந்த பூமிதேவி இவனை அடக்க ஒரு பெரிய தேளை பூமிக்கு அனுப்புகிறாள். அந்த தேளுடன் போர்புரிந்து. அந்த தேளின் விஷம் ஒரியனுள் சென்று இறந்துவிடுகிறான். இந்த தருணத்தில்தான் தேளின் அடையாளத்துடன் கூடிய நட்சத்திரக் கூட்டம் வானில் தோன்றுவதாக கிரேக்கப் புராணம் சொல்கிறது.

இந்தியப் புராணத்தின்படி, விருச்சிக ராசிக்கு அதிதேவதையாக நரசிம்மர், வீரபத்திரர், சரபேஸ்வரர் ஆகியோரை குறிப்பிடுகின்றனர். காரணம் இவர்கள் காலைப்பொழுதிலோ மாலைப் பொழுதிலோ பிரசன்னம் ஆகாமல், காலை - மாலை சந்திக்கும்பொழுதில் பிரசன்னம் ஆவதால் விருச்சிகத்திற்கு தேவதையாகவும் போர் புரியும் குணம் கொண்டவர்களாகவும், ஒன்பதாம் பாவகம் என்பதற்கு அருகில் இருப்பதால் பக்தர்களை காக்கும் தெய்வங்களாகவும் இவர்கள் தோன்றுகிறார்கள், பக்தர்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் நேருமோ அப்பொழுதெல்லாம் பிரசன்னமாகி பக்தர்களை காக்கும் கடவுளாக உள்ளனர் என்பதே விருச்சிகத்தின் சிறப்பாக உள்ளது.

விருச்சிக ராசியுடன் தொடர்புடைய இடங்களும் பெயர்களும்

அணுசக்திக் கூடங்கள், மறைவான இடங்கள், பாதாள அறைகள், பாதாள அறைகளைக் கொண்ட பாதைகள், பாதாளத்தில் உள்ள தெய்வங்கள், மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை செய்யும் இடங்கள், அலைகளற்ற ஆழமான ஆற்றுப்படுகை, கடல், ஆராய்ச்சி செய்யும் இடங்கள், ஆராய்ச்சிக்கு உதவும் முக்கியமான திட்டங்கள், துப்பறியும் இடங்கள் (காவல்துறை), ஆள் அரவமற்ற அமைதியான இடங்கள், நீர்தேக்கம், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், போர்புரியும் இடங்கள் போன்றவை நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன.

சண்முகம், அகல்யா, சுடலைமாடன், முருகேசன், முத்து முருகன், தனம், முருக பாலன், சுதந்திரன், குப்புசாமி, குப்பன் இன்னும் இதுபோன்ற நாமங்கள் உருவாக்குகின்றது இந்த ராசி...

விருச்சிக ராசி பரிகாரங்கள்...

துன்பங்களைப் போக்குவதற்கு துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கும் அதற்குரிய பாவகங்களில் உள்ள தெய்வங்களை வழிபடுவது சிறப்பாகும்.

பொதுவாகவே விருச்சிக ராசியை அசுப கிரகங்கள் பார்வை செய்யும் பொழுதும், அசுப கிரகங்கள் கடந்து செல்லும்பொழுதும் பிரச்னைகள் உருவாகும். அச்சமயத்தில் அதற்குரிய தேவதைகளை வழிபடுவது சிறப்பான அமைப்பாகும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கிரகங்கள் இருப்பதில்லை. சூரியன் - விருச்சிகத்தில் இருந்தால் திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அல்லது பாதாளத்தில் உள்ள ஈஸ்வரனை வழிபடுவது நிவர்த்தியான அமைப்பாகும்.

சந்திரன் - எட்டில் இருந்தால் பாதாளத்தில் உள்ள நீரை எடுத்து வந்து சந்திரனுக்கு அபிஷேகம் செய்தல் நலம் செவ்வாய் இருந்தால் பாதாள செம்பு முருகன், திண்டுக்கல்.

புதன் இருந்தால் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் வியாழன் பாதாளத்தில் உள்ள லிங்கத்தை வழிபடலாம்.

சுக்கிரன் எனில், கரூர் அருகே பாதாள நரசிம்மரை வழிபடலாம்.

சனி இருந்தால் குத்தாலத்தில் சோழீஸ்வரம் கோயிலில் பாதாளத்தில் அமிர்தத்துடன் உள்ள சனீஸ்வரரை வழிபடலாம்.