Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தோஷம் போக்கும் கோமாதா வழிபாடு!

பசுவின் உடலில் சகல தேவதைகளும் இருக்கிறார்கள் என்பது ஐதீகம். இந்து சமயத்தில் பசுவை வணங்குவதை பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். பசு, கோமாதா என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும் புனிதத்திற்குரியவர்களும் இருக்கிறார்கள். பசுவின் கொம்புகளின் அடியில் பிரம்மன், திருமால் கொம்புகளின் நுனியில், கோதாவரி முதலில் புண்ணிய தீர்த்தங்கள். சிரம் - சிவபெருமான் நெற்றி நடுவில் - சிவசக்தி மூக்கு நுனியில் - குமரக்கடவுள்

``மூக்கினுள் - வித்தியாதார்.இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்.

இரு கண்கள் - சந்திரர், சூரியர்.

பற்கள் - வாயு தேவர்.

ஒளியுள்ள நாவில் - வருண பகவான்.

ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்.

உதட்டில் - உதயாத்தமன சாந்தி தேவதைகள்.

கழுத்தில் - இந்திரன்.

முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்.

மார்பில் - சாந்தி தேவர்கள்.

நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு.

முழந்தாள்களில் - மருத்துவர்.

குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்.

குளம்பின் நடுவில் - கந்தவர்கள்

குளம்பின் மேல் இடத்தில் - அரம்பை மாதர்.

முதுகில் - உருத்திரர்.

சந்திகள் தோறும் - எட்டு.

வசுக்கள் அரைப்பரப்பில் - பிதுர் தேவதைகள்.

யோனியில் - ஏழு மாதர்கள்.

குதத்தில் - இலக்குமி தேவி.

வாயில் - சர்ப்பரசர்கள்.

வாலின் முடியில் - ஆத்திகன்.

கோமியத்தில் - ஆகாய கங்கை.

சாணத்தில் - யமுனை நதி.

ரோமங்களில் - மகாமுனிவர்கள்.

வயிற்றில் - பூமாதேவி.

மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்.

சடத்கனியில் - காருக பத்தியம்.

இதயத்தில் - ஆசுவனியம்.

முகத்தில் - தட்சினாக்கினி.

எலும்பிலும் சுக்கிலத்திலும் யாகத் தொழில் முழுவதும் எல்லா அங்கங்கள் தோறும் கலங்கா நிறையுடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.

கோமாதாவின் உடற்பகுதியும் அங்கே அருளும் தெய்வங்களும்.

முகம் மத்தியில் - சிவன்.

வலக்கண் - சூரியன்.

இடக்கண் - சந்திரன்.

மூக்கு வலப்புறம் - முருகன்.

மூக்கு இடப்புறம் - கணேசர்.

காதுகள் - அஸ்வினி குமாரர்.

கழுத்து மேல்புறம் - ராகு.

கழுத்து கீழ்புறம் - கேது.

கொண்டைப்பகுதி - பிரம்மா.

முன்கால்கள் மேல்புறம் - சரஸ்வதி, விஷ்ணு.

முன் வலக்கால் - பைரவர்.

முன் இடக்கால் - அனுமார்.

பின்னங்கால்கள் - பராசரர்,

விஷ்வாமித்திரர்.

பின்னங்கால் மேல்பகுதி - நாரதர், வசிஷ்டர்.

பிட்டம் கீழ்புறம் - கங்கை.

பிட்டம் மேல்புறம் - லட்சுமி.

முதுகுப்புறம் - பரத்வாஜர், குபேரர், வருணன், அக்னி.

வயிற்றுப்பகுதி - ஜனக்குமாரர்கள் பூமாதேவி.

வால்மேல்பகுதி - நாகராஜர்.

வால் கீழ்பகுதி - மானார்.

வலக்கொம்பு - வீமன்.

இடக்கொம்பு - இந்திரன்.

முன் வலக்குளம்பு - விந்திய மலை.

முன் இடக்குளம்பு - இமய மலை.

பின் வலக்குளம்பு - மந்திர மலை.

பின் இடக்குளம்பு - த்ரோண மலை.

பால் மடி - அமுதக்கடல்.

கோமியம், பால், தயிர், நெய், சாணம் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவை பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது. பசுவின் கோமியத்தில் வருணன், பாலில் சந்திரன், தயிரில் வாயு, நெய்யில் சூரியன், சாணத்தில் அக்னி தேவன் ஆகியோர் வாசம் செய்கின்றனர். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தோஷம் உண்டு, பசுவை தவிர. பசுக்களின் மூச்சுக்காற்றை சுவாசிப்பது சஞ்சீவினியைவிட சிறந்த மருந்தாகும். தீராத தோல் நோய் உள்ளவர்கள் ஏதேனும் கோசாலையில் தினசரி 2 மணி நேரம் துப்புரவு பணி செய்து வந்தால், நோய் தீரும். ஒரு பசுவை நாள் முழுவதும் பார்த்தபடி தொழுவதில் இருந்தாலே, பிரம்மஹத்தி தோஷம் விலகிவிடும் என்கிறார்கள். ஒரு பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவனின் முன்னோர்களின் ஏழு தலைமுறையினர் முக்தி அடைவார்களாம். பசுவை தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும். கோபூஜை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கிவிடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கெட்ட சக்திகள் நெருங்காது. முற்பிறவி செய்த பாவங்கள் நீங்கிவிடும்.பசுவை பூஜித்தால், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங் களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும். பசு என்பதற்கு புல் கொடுத்தாலும் (கோச்ரானம்) பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியாகாலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக முக்கியமான காலமாகும். பசு நடக்கும்போது எழும் புழுதியானது, நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்தானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக் கொண்டார்கள். மா என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது. பசு வசிக்கும் இடத்தில் அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ

100 மடங்கு பலனைத் தரும். மனிதன் கண்களுக்கு புலப்படாத மாத்யு, எமன், எம தூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.ஒருவர் இறந்தபின் பூலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன் அஸிபத்ரவனத்தல் ``வைத்ரணிய நதியை’’ அதாவது இந்த நதியில் மலம், மூத்திரம், சளி, சுடுநீர் என்று ஓடும் ஒரு நதி. இதனை கடக்க ஒவ்வொரு ஜிவன்களும் தவிக்கும். ஆனால், பசுதானம் செய்பவர்களுக்கு இத்துன்பமில்லை. ஆம்.. இறந்தவர்களின் உறவினர்கள், இறந்தவர்களை நினைத்து பசுதானம் செய்யும் போது, மேல் லோகத்திலும் ஒரு பசுமாடு தோன்றி இறந்தவர்களுக்கு வைத்ரணிய நதியை கடக்க உதவி செய்யுமாம். இறந்த ஜீவாத்மா, பசுவின் வாலை பிடித்துக் கொண்டு வைத்ரணிய நதியை கடந்துவிடுமாம். இத்தகைய விஷயத்தை ``கருடபுராணம்’’ கூறுகிறது.உலகத்தில், விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடத்தில் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது. அதிகாலையில் எழுந்தவுடன் யாரிடமும் பேசாமல்,

``சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி

பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே’’

- என்ற மந்திரத்தை உச்சரித்தபடி பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால், குழந்தைப் பேறு கிடைக்குமாம்.

பசு காயத்ரி மந்திரம்

``ஓம் பசுபதயேச வித்மஹே

மகா தேவாய தீ மஹி

தந்நோ பசுதேவிஃ ப்ரசோதயாத்’’

கோமாதாவை காப்போம்! நேசிப்போம்!! பூஜிப்போம்!!!

ஜோதிடர் S.தனபாலன்