ஆடி பெருக்கானது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் என்னவெல்லாம் நாம் செய்கிறோமோ, அதெல்லாம் பெருக்காக அமையும். அன்றைய தினம் எதை தொடங்கினாலும் அது வெற்றி பெறும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக பல பேருக்கு கை கொடுக்கக் கூடிய அற்புதமான நாள். புதிதாக எதையாவது வாங்க வேண்டும் என்றாலும் இந்த...
ஆடி பெருக்கானது வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் என்னவெல்லாம் நாம் செய்கிறோமோ, அதெல்லாம் பெருக்காக அமையும். அன்றைய தினம் எதை தொடங்கினாலும் அது வெற்றி பெறும் என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக பல பேருக்கு கை கொடுக்கக் கூடிய அற்புதமான நாள். புதிதாக எதையாவது வாங்க வேண்டும் என்றாலும் இந்த நாளில் வாங்கலாம். அன்றைய தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை வழிபடும் நேரம் ஆகும். இந்த நேரத்தில் வழிபாடு செய்ய முடியாவிட்டால் காலை 11 மணி முதல் 12 மணி வரையுள்ள இந்த நேரத்தில் தாலி சரடையும் மாற்றிக் கொள்ளலாம்.
அன்றைய தினம் உப்பும் , மஞ்சளும் வாங்கினால் போதும். கிணறு, மோட்டார், பைப் எதுவாக இருந்தாலும் அதற்கு கொஞ்சம் மஞ்சள், குங்குமம், பூ வைக்க வேண்டும். ஆறுகள் இல்லாத இடத்தில் இருந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் தேக்கி வைத்துக் கொண்டு அதில் மஞ்சள் தூள், மலர் சேர்த்து வழிபடும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.வாழைப்பழம், கொய்யா, மாம்பழம், நாவல் பழம் , பச்சரிசியுடன் வெல்லம் கலந்து வைக்கும் காப்பரிசியையும் வைக்க வேண்டும். பிறகு வடை, பாயாசம் செய்யும் வழக்கம் இருந்தால் அதையும் செய்து சுவாமி முன்பு வைக்கலாம்.