Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வித்தியாச விநாயகர் கோவில்களும் வழிபாடுகளும்

* விழுப்புரம் அடுத்த தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது விநாயகரை தரிசிக்கலாம்.

* ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன புண்ணிய காலங்களில் இந்த விநாயகரின் தெற்குப் பகுதியிலும் உத்திராயன காலங்களில் வடக்குப் பகுதியிலும்

தன்னுடைய கதிர்களை பாய்ச்சி, சூரியன் இந்த விநாயகரை வணங்குகிறார்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரில் சிவலிங்க ஆவுடையாரின் மேல், வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும், இடக்கையில் கொழுக்கட்டையுடனும்

விநாயகர் வீற்றிருக்கிறார்.

* திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவியில் உள்ள மிளகுப் பிள்ளையார் ஆலயத்தில் மழை பொய்த்துப் போகும் காலங்களில் இவரது உடலில் மிளகை அரைத்து தடவி அபிஷேகம் செய்தால் உடனே மழை பொழியும்.

* சேலம் மாவட்டம், ஆத்தூரில்

தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதி வீற்றிருக்கிறார். இவர் தலையை ஆட்டும் விதமாக இடது புறம் சாய்ந்தபடி அருள்கிறார்.

* கோவை மத்தம் பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இங்கு

விநாயகர் அருகில் நந்தியம்பெருமாள் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

* சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் திருநாரையூரில் உள்ள ஆலயத்தில் உளியால் செதுக்கப்படாத பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

விநாயகர் வழிபாடு!

* விநாயகர் வழிபாடு மிக எளிமையானது. மண், பசுஞ்சாணம், மஞ்சள், சந்தனம், வெள்ளெருக்கு வேர், அதிமதுரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், திருநீறு, சர்க்கரை, வெல்லம் என எல்லாவற்றிலும் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்பதால் விநாயகர் எனப் பெயர் பெற்றார்.

* ஒரே சன்னதியில் இரண்டு விநாயகரை பிரதிஷ்டை செய்து இரட்டை விநாயகராக வழிபடுவர். இவர்களை விக்னராஜர், விநாயகர் என சொல்வர். நடையும் நானே, அதைப் போக்கும் விடையும் நானே என்பது இரட்டைப் பிள்ளையாரின் தத்துவம் என்கிறார் காஞ்சி மஹாப் ெபரியவர்.

* சித்தூர் அருகே காணிப்பாக்கம் நிஜரூப சுயம்பு விநாயகர் சக்தி மிக்கவர். வழக்குகளில் நியாயமான தீர்ப்பு வர இவரை வழிபடுவர்.

* மும்பை சித்தி விநாயகர் கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை தரிசித்தால், வேலை தேடுபவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு நன்றிக் கடனாக முதல் மாத சம்பளத்தில் சித்தி விநாயகருக்கு புதிய வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.

* பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள விநாயகர் கல்யாண யோகம் அளிப்பவராக திகழ்கிறார். இவருக்கு சோமாஸி என்னும் கர்ஜிக்காய் மாலை சாத்தி வழிபட திருமணத்தடை நீங்கும். வளர்பிறை சதுர்த்தியன்று இவரை தரிசிப்போருக்கு குறையில்லா வாழ்வு கிடைக்கும்.

* மகாராஷ்டிரா மாநிலத்தில் அஷ்ட விநாயகர் என்னும் பெயரில் புகழ் மிக்க 8 கோயில்கள் உள்ளன. சுதந்திரப் போராட்ட காலத்தில் இப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தி மக்களுக்கு நாட்டுப்பற்றை ஊட்டியவர் பாலகங்காதர திலகர்.