Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவஞ்சிக்குளம், மஹாதேவர் ஆலயம்

சேரநாட்டை ஆட்சி செய்த பெருமாக்கோதையார் என்ற மன்னன் திருவஞ்சிக்குள மகாதேவர் மீது அதீத பக்தி வைத்திருந்தார். இந்த பெருமாக்கோதையார்தான் சேரமான் என்றழைக்கப்பட்டான். ஒவ்வொரு நாளும் மகாதேவரை வணங்கும்போது அவருக்கு சிலம்பொலி கேட்கும். அந்த ஒலி கேட்டபின் தினமும் உணவு உட்கொள்வார். ஒருநாள் இறைவனை வழிபட்டு வெகுநேரம் ஆகியும் அவருக்கு சிலம்பொலி கேட்கவில்லை. ஆதலால், தன்னுடைய வழிபாட்டில் ஏதோ குறைபாடு ஏற்பட்டுள்ளதோ என கருதிய மன்னன், தன் உடைவாளால் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றான். அச்சமயம் அவ்விடத்தில் சிலம்பொலி கேட்டது. அப்பொழுது காட்சியளித்த இறைவன், ''மன்னா சோழ நாட்டில் இருக்கும் என்னுடைய பக்தன் சுந்தரன் இயற்றிய இனிமையான பாடலில் மெய்மறந்து விட்டேன். அதனால்தான் என்னுடைய சிலம்பொலி கேட்க காலதாமதமாகி விட்டது'' என்றார்.

இறைவனின் மனதை மயக்கும் வித்தை தெரிந்த சிவனடியாரைப் பற்றி அறியாமல் இருந்து விட்டோமே என வருந்திய சேரமான் பெருமான். சுந்தரரை பற்றி சிவபெருமானிடம் கேட்டறிந்தார். பின்னர்,சேர மன்னனின் அழைப்பை ஏற்று சுந்தரர் திருவஞ்சிக்குளம் சென்றார்.சேரமான் பெருமாள் சுந்தரரை தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உரிய ஆசனத்தில் அமரவைத்து பாத பூஜை செய்தார். பின் சுந்தரரின் விருப்பத்திற்கு ஏற்ப பல சிவாலயங்களுக்கு சுந்தரரை அழைத்துச் சென்று வழிபாடு செய்தார். இறுதியாக திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலுக்குச் சென்றார்.

சிலகாலத்திற்கு பின் சுந்தரருக்கு சேரநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அங்கு சென்று உலக வாழ்வினை அகற்ற வேண்டி தலைக்கு தலை மாலை என்னும் பதிகம் பாடவே அதைக் கேட்ட இறைவன் அவரை அழைத்து வரும்படி சிவகணங்களை அனுப்பினார். அச்சமயம் அரண்மனையில் இருந்த சேரமான் பெருமாள் திருவஞ்சிக்குளம் சென்றார். ஒருமுறை சுந்தரரிடம் கயிலாயம் செல்ல என்ன வழி என்று கேட்ட போது ‘பஞ்சாட்சரம் சொல்வதுதான் வழி' என கூறியது நினைவிற்வர தன்னுடைய குதிரையில் அமர்ந்து அதன் காதில் ‘நமசிவாய' என ஓதி சுந்தரரை தொடர்ந்து செல் என வேண்டவே. இருவரும் ஒன்றாக கயிலாயம் சென்றடைந்தனர். இங்கு அப்பர், சேரமான், சுந்தரர், சேக்கிழார் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது.

பரசுராமர் தனது தாயாரை கொன்ற பாவத்தை போக்க இந்த திருத்தலம் வந்து வழிபட்டார்.

*இந்த தெய்வத்திற்கு சூரியன், வியாழன், சந்திரன், சனி, சுக்ரன் நாமாகரணம் செய்துள்ளது.

*உங்கள் ஜாதகத்தில் 12ல் கேது இருந்தால், ஆடி, சுவாதி நட்சத்திர நாளன்று இத்தலத்தில் சுவாமியை தரிசனம் செய்தால் மோட்சம் உண்டாகும்.

*மாசி மாதம் வரும் மஹாசிவராத்திரி நாளில் நோய் தாக்கம் உடையவர்கள் தரிசனம் செய்தால் நோயிலிருந்து விடுபட்டு மோட்சம் உண்டாகும்.

*பரணி நட்சத்திர நாளில் மரத்தினால் செய்த வெள்ளை குதிரையை மூன்று நாள் வீட்டில் வைத்து வழிபாடு செய்து இதை இங்கு வைத்துவிட்டு நீலநிற சங்குப்பூவை கொடுத்து வழிபட்டால் திருமண தோஷங்கள் விலகி வீட்டில் சுபகாரியம் உண்டாகும்.

*மோட்சத்திற்காக பிரயத்தனம் செய்பவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பான அமைப்பை உண்டாக்கும். இந்த கோயிலில் மஹா வில்வசெடி ஒன்றை நட்டு வைத்து வழிபட்டால் சிறப்பான நற்பலன்கள் உண்டாகும்.

எப்படிச் செல்வது?

கேரளாவில் சென்னை-கொச்சி இருப்புப்பாதையில் இரிஞாலக்குடா நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி. மீ. தொலைவில் உள்ளது.