Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கார்த்திகை மாதமும் அதன் சிறப்புகளும்

கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு, அதிகளவு மழை பெய்யும் கார் காலமாகும். காந்தன் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. 4விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்தால் அரிதான மோட்ச நிலை கிடைக்கும். துளசி இலையால் அர்ச்சனை செய்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

4சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து தீபப் பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகை முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.4கார்த்திகை பவுர்ணமி நாளில் முருக வழிபாட்டிற்கும் கார்த்திகை தீப நாளன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது. 4கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெறலாம்.

4திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி நாளில் தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், இந்திரன், வாயு தேவர்களும், குபேரன், யமன் வலம் வந்துள்ளதாகவும், மகாவிஷ்ணு மகாலட்சுமியுடன் வலம் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று மட்டுமே அர்த்தநாரீஸ்வரராக வெளிவருவது சிறப்பு. 4கார்த்திகையில் சோமவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதத்தில் தீபம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.

4இம்மாதத்தில் சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், விநாயகர், சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரம்மாதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

4கார்த்திகை மாத அமாவாசை நாளில் திருவீச நல்லூரில் ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் உள்ள கிணற்றில் கங்கை பிரவேசிப்பதாக நம்பிக்கை. 4சென்னை திருெவாற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோவிலில் புற்று வடிவ லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பவுர்ணமியிலிருந்து மூன்று நாட்கள் மட்டும் கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.

4திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து மடக்கு தீபாராதனை நடைபெறும். இங்கு நெல்லிக்கனி பிரசாதம் சிறப்பு. கார்த்திகை மாதம் அனைத்து தெய்வங்களுக்குரிய மாதம். ஆதலால் போற்றி அருள் பெறுவோம்.

தொகுப்பு: எம்.வசந்தா, சென்னை.