தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் கலந்தது. வீட்டில் தினமும் காலை, மாலை தீபம் ஏற்றினால், தீய சக்திகள் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக தீபத்தை சிறப்பிக்கும் கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.தீபங்களை எங்கு, எப்படி ஏற்ற வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளன.
கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்.
திண்ணைகளில்: நான்கு விளக்குகள்.
மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள்.
நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்.
நடைகளில்: இரண்டு விளக்குகள்.
முற்றத்தில்: நான்கு விளக்குகள்.
பூஜையறையில்: இரண்டு விளக்குகள் ஏற்றினால் சர்வ மங்கலங்கள் ண்டாகும்.
சமையல் அறையில்: ஒன்று, அன்ன தோஷம் ஏற்படாது.தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: எமனை வேண்டி தீபம் ஏற்ற ஆயுள்விருத்தி உண்டாகும். தீபத்தில் பல வகைகள் உண்டு.
சித்ர தீபம்: சித்திரக் கோலம் இட்டு, அதன் மீது ஏற்றப்படும் தீபம்.
மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும்
தீபம். ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைப்பது.
ஜல தீபம்: தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடுவது.
படகு தீபம்: கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றுவது.
சர்வ தீபம்: வீட்டின் அனைத்து இடங்களிலும் வரிசையாக ஏற்றுவது.
- கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்.


