Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ராசிகளின் ராஜ்யங்கள் ரிஷபம்

ரிஷபம் என்றால் காளை மாடு என்று பொருள். இந்த ரிஷபமானது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவகமாகிறது. முகத்தையும் அதன் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் தன்மையையும் பேச்சையும் குறிக்கிறது. இந்த ரிஷபத்தில் ஆட்சி ஆளுமைத் திறனை சுக்ரன் பெறுகிறார். இந்த ரிஷப ராசியானது நிலத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

மேலும், நீள்வட்டப்பாதையில் இரண்டாவது வட்டப்பாதையில் பயணிக்கும் கிரகம். இந்த வீனஸ் என்ற சுக்ரன் கிரகம் பயணிக்கும் பாதையில் பூமியைவிட அதிக ஒளித்தன்மையை உள்வாங்கும் திறனை சுக்ரன் பெற்றுள்ளது. கிரகங்

களில் அதிகமாக ஒளிரும் கிரகம் என்று சுக்ரன்தான் சொல்லப்படுகிறது. வைரமானது நிலத்தத்துவத்தின் அடிப்படையில் பல வருடம் பூமியில் பல மாற்றங்கள் பெற்று இருள்தன்மையில் இருக்கிறது. இருளான இந்த பொருள் நன்கு இறுகிய நிலையில் கடினமான தன்மையுடன் பூமியில் மேலெழுந்து சூரியனின் ஒளியை பெற்றவுடன் அதிக ஒளிரும் தன்மை தருகிறது.

ரிஷபத்தின் சிறப்பு...

ரிஷபத்தில்தான் சந்திரன், கேது உச்சம் ெபறுகிறது. சுக்ரன் ஆட்சி பெறுகிறது. இதில், சந்திரன் - சுக்ரன் இணைவு பலம் பெறுகிறது. இந்த இணைவானது மழையை வருவிக்கும் அமைப்பை பெறுகிறது. இந்த சந்திரன் - சுக்ரன் அமிர்தவர்ஷினி என்று அழைக்கப்படுகிறது.

காலப்புருஷனின் தன ஸ்தானத்தின் தொடர்பைப் பெற்றுள்ளது. இந்த ராசி / லக்னத்தில் பிறந்தவர்கள் பொருள் ஈட்டும் விஷயத்தில் கவனமாகவும் சிந்தனை அதை நோக்கியே இருப்பவராக உள்ளார்கள்.

சந்திரன் - கேது இணைவதால் தாய் வழியில் பிணக்கம் அல்லது நோய் உண்டாக்கும் அமைப்பைப் பெற்றிருக்கும். வாழ்வில் ஒரு சுமையை நிரந்தரமாக சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட வேண்டிய சூழ்நிலை. பெண்ணாக இருந்தால், தாயுடன் பிணக்கு. ஆணாக இருந்தால், தாயைத் தாங்கி சுமப்பார்கள்.

ரிஷபத்தின் புராணக் கதைகள்

மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுவதால் மேஷத்தை சிவமாக உருவகித்துக் கொண்டால், இரண்டாம் பாவகமான ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெறுகிறார். சூரியனையும் சந்திரனையும் நமது புராணங்கள் தந்தையான சிவனாகவும் தாயான பார்வதியாகவும் சொல்வதற்கு பொருத்தமாக உள்ளது. இவர்கள் இருவரையும் தாங்கும் இடமாக நந்திதேவன் என்ற (ரிஷபன்) தன்னை அலங்கரித்து கொண்டுள்ளான் என்பது ஆச்சர்யம்தான். ரிஷபம் இங்கு தன்னை அலங்கரித்துக் கொள்வது சிவ-பார்வதிக்காக சொல்லப்படுகிறது. அதாவது, ஆன்மா (சூரியன்) - உடல் (சந்திரன்) ஆகியவற்றை தாங்கும் நாம் நம்மை அலங்கரித்து கொள்வது நம்முள் உள்ள இவர்களுக்காத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

யூரோப்பியர்களின் ரிஷபம் (Taurus) ராசிக்கான கடவுள் ஜீயஸ் (Zeus) என்பவராக உள்ளார்.

இந்த ஜீயஸ் ஒரு அழகான காளையாக உருமாறி ஃபோனீசியாவின் அரண்மனையின் அருகில் சுற்றி வருகிறார். அவ்வாறு சுற்றி வரும்பொழுது அந்த நகரையே தனது அழகில் மயக்குகிறார். அந்த அழகான காளையை பற்றி ஊரெங்கும் பேசுகின்றார்கள். அவ்வாறு பேசுகின்ற பேச்சு அரண்மனையை தொடுகின்றது. இந்த அழகான காளையை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஃபோனீசியாவின் இளவரசிக்கு ஏற்படுகின்றது.

அதனால், அந்த காளை அரண்மனைக்கு வருவிக்கப்படுகிறது. அவ்வாறு வருவிக்கப்பட்ட காளையை இளவரசி தொட்டுப் பார்க்கிறாள். பின்பு, அந்த காளையின் மீது அமர்ந்து பார்க்கிறாள். அப்பொழுது அந்த காளை வேகமாக பயணிக்கிறது. அனைவரும் அதை துரத்தவே, அந்த காளையை பிடிக்க இயலவில்லை. இறுதியில் அந்த காளை கீரிஸ் நாட்டிற்குச் செல்கிறது. அங்கே சென்றதும் காளை உருமாறி ஜீயஸ் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. பின்பு, இளவரசியை திருமணம் செய்து கொண்டதாகப் புராணங்கள் கூறுகிறது. இந்த ராசிக்காரர்கள் எளிதில் காதல் வயப்படுபவர்களாக உள்ளனர்.

ரிஷபம் தொடர்பான இடங்களும் பெயர்களும்...

எங்கெல்லாம் அழகியல் வெளிப்படு கிறதோ அங்கெல்லாம் ரிஷபமான சுக்ரனின் அமைப்புகள் வருகின்றது. கல்யாண மண்டபம், அழகிய கட்டடங்கள், சினிமா ஸ்டுடியோக்கள், பட்டு நெய்யும் இடங்கள், பியூட்டி பார்லர்கள், பெண்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், நகைக் கடைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் இடங்கள், நாட்டியங்களை கற்றுத் தரும் இடங்கள், ஓவியக் கூடங்கள், சிற்பங்கள் அணி வரிசை செய்யும் இடங்கள், ஆடை விற்பனை செய்யும் இடங்கள், கலைக் கல்லூரிகள், இனிப்பான பொருட்கள், பணம் சேமிக்கும் இடங்கள், சூதாட்ட மையங்கள், எல்லோருடைய முகங்கள், பேச்சுகள், அழகியலை

வெளிப்படுத்தும் பறவைகள்...

ஸ்ரீ என தொடங்கும் பெயர்கள், லெட்சுமி, வாசனை, மழை, நடனம், இனிப்பு , ரோகிணி போன்ற பெயர்கள்...

ஸ்திர ராசியின் சிறப்பு...

ரிஷப ராசியாக அமையும் பொழுது சந்திரன் இந்த ராசியில் உச்சம் பெறுகிறது. இந்த ராசியை சூரியன் அடைந்து கடக்கும் காலத்திலிருந்துதான் மழையை வருவிக்கும் முதல் காலம் தொடங்குகிறது. காரணம் சந்திரன் - சுக்ரனின் சக்தியை இந்த ரிஷபம் பெற்றிருக்கிறது.

இது ஸ்திர ராசியாக இருப்பதால் மழை வந்தால் கண்டிப்பாக தொடர்ந்து விடாமல் பெய்யும் அமைப்பை இந்த ராசி செய்யும்.

தொழில் தொடங்குவது, நிலம் வாங்குவது, முகூர்த்தம் குறிப்பது இந்த ராசியின் லக்னமாக அமைவது சிறப்பாக இருக்கும்.

எச்சரிக்கை...

ரிஷப ராசி மற்றம் ரிஷப லக்னக் காரர்களுக்கு ரிஷபத்தை அசுபகிரகங்கள் பார்வை செய்யும் பொழுதும் ரிஷபத்தில் அசுப கிரகங்கள் இருக்கும் பொழுதும் எச்சரிக்கை தேவை. அச்சமயம் தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால் பிரச்னைகள் ஓரளவு குறையும் வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷபத்திற்கான பரிகாரம்...

ரிஷபத்திற்கான பரிகாரம் கொஞ்சம் வித்தியாசமானது. ஆம், மழை என்பதை சந்திரன் - சுக்ரன் இணைவாக உள்ளது. ஆகவே, சுக்ரன் நீசம் பெறும் சமயங்களிலும் சுக்ரன் பாதிக்கப்படும் தருணத்திலும் மழைநீரை ஒரு பிங்க் அல்லது வெள்ளை நிறக் கண்ணாடி பாட்டில் களில் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்பொழுது சிறிதளவு அதில் ஊற்றி குளித்தால் சுக்ரன் உங்களுக்கு பலம் பெற்றுக் கொண்டே இருப்பார்.