Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்!!

பிரபஞ்சத்தின் சக்தியாக பஞ்சபூதங்கள் உள்ளன. அவ்வாறே பஞ்சபூதங்களான நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் என அனைத்து வடிவங்களாகவும் இறைவனும் இறைவியும் உள்ளனர். அதற்குள்ளும் சூட்சும வடிவமாக கிரகங்களும் பொதிந்துள்ளன என்பதே சக்திக்குள் அடங்கியிருக்கின்ற சக்திகளை அறிந்து கொள்வதாகும். இதில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சக்திகள் இணைவாக இயக்கங்கள் உள்ளன. இந்த இயக்கங்கள் இறை வடிவங்களாக இறை திருத்தலங்களாக உள்ளன என்பதே ஜோதிடத்தின் ஆச்சர்யம்தான்.மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் அரக்கர்களான சூரபத்மன், சிங்கமுக சூரன், தாரகாசுரன் ஆகியோரை சம்ஹாரம் செய்து திருத்தணிகை ேநாக்கி செல்லும் மார்க்கத்தில் குன்றத்தூரில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் முருகப்பெருமான். அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர் கந்தழீஸ்வரர் ஆவார். இந்த கந்தழீஸ்வரர் குன்றத்தூரில் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு செவ்வாய் மற்றும் சனிக்கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது. இத்திருத்தலத்தின் சிறப்பு என்னவெனில் சேக்கிழார் வழிபட்ட முருகப்பெருமான்.

* கிருத்திகை நட்சத்திரத்தன்று தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து இந்த முருகப் பெருமானை வழிபட்டால் எப்படிப்பட்ட வறுமையில் இருப்பவரும் செல்வந்தனாக மாறுவார்.

* பூரம் மற்றும் பரணி நட்சத்திரத்தன்று திருமணம் ஆகாதவர்கள் அர்ச்சனை செய்து கோயிலுக்கு வரும் பிள்ளைகளுக்கு உணவும் உடையும் கொடுத்தால் சுபகாரியம் நடைபெறும்.

* அனுஷம் நட்சத்திரத்தன்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து நல்லெண்ணெய் பன்னீர் வாங்கிக் கொடுத்தால் பகைவர்கள் மறைந்து போவார்கள்.

* மிகப் பெரிய இண்டஸ்ட்ரிஸ் நடத்துபவர்கள் பௌர்ணமி அன்று ஒரு பஞ்ச உலோகத்தில் வேல் செய்து சுவாமியின் கருவறையில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணிநேரம் வைத்து திரும்பப் பெற்றுக்கொண்டு வீட்டிற்குசி சென்று பச்சரி நிரம்பிய பாத்திரத்தில் பஞ்சலோக வேல் வைத்து வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

* நீண்ட காலம் திருமணம் ஆகாதவர்கள் நீல நிற சங்குப்பூவை 18 எண்ணிக்கையில் எடுத்து மாலை கோர்த்து சுவாமிக்கு அணிவித்து மனதார வேண்டினால் விரைவில் திருமணப் பிராப்தி உண்டாகும்.

* கன்ஸ்டரக்‌ஷன் துறையில் இருப்பவர்கள் பௌர்ணமி அன்றோ அல்லது சனிக்கிழமை அன்றோ சுவாமியை தரிசனம் செய்து வாயில்லா ஜீவன்களுக்கு அன்னதானம் அளித்தால் தொழிலில் மேன்மேலும் வளர்ச்சி உண்டாகும்.

* மனநிலை பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு ஐந்தாம் பாவகமான ரிஷபத்தில் செவ்வாய், சனி மற்றும் சுக்ரன் இணைவு இருந்தால் ஒரு செவ்வாய்க் கிழமையில் வரும் பௌர்ணமி நாளில் கோயிலில் தங்கி பிறகு மருத்துவ ஆலோசனைக்கு முயற்சி செய்யவும். மனநலப் பாதிப்பை சரி செய்வதற்கான பிரசித்தி பெற்ற கோயிலாக இத்திருத்தலம் உள்ளது.