Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெற்றிக் கதவுகளை திறக்கும் ஸ்ரீவிஷ்ணுமாயா கோயில்

கருவண்ணூர், சிறியப்பாளம், திருச்சூர், கேரளா

திருச்சூரின் கருவண்ணூர் சிறியப்பாளத்தில் அமைந்துள்ள, கேரளாவின் மிக வலிமையான கோயில்களில் ஒன்றாகும். ஸ்ரீ விஷ்ணுமாயா குழந்திச்சாத்தன் சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கோயில், ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, 400 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறும் பக்தியும், மாந்திரீக சேவைகளும், பாரம்பரியமும் கொண்ட தாகும் ஆகும்.

தெய்வீக தோற்றம்

பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்த புனித பூமி ஸ்ரீ விஷ்ணுமாயா சுவாமியின் அருளால் ஆசீர்வதிக்கப்பட்டது.அவர் நிரபராதிகளை காப்பாற்றவும், துஷ்ட சக்திகளை அழிக்கவும், நீதியும் நிம்மதியும் நிலைநிறுத்தவும் அவதரித்தார்.குழந்திச்சாத்தன் என அழைக்கப்படும் சுவாமி, தனது பக்தர்களின் உண்மையான பிரார்த்தனைக்கும், சிறப்பு பூஜைக்கும் உடனடியாக பதிலளிக்கும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றப்படுகிறார்.

அந்தக் காலத்தின் மாந்திரீக மற்றும் தாந்திரீக சித்தர்கள் இங்கே இந்தக் கோவிலை நிறுவி, சக்தி வாய்ந்த மாந்திரீக சேவைகளை ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக, கருவண்ணூர் கரணையில் தேவஸ்தானம், பக்தர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் தீர்வளிக்கும் சித்த க்ஷேத்திரம் எனப் புகழ் பெற்றுள்ளது. இங்கு, முதன்மை புரோகிதர், பக்தர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, அதற்கேற்ற பூஜைகளை பரிந்துரைக்கிறார்.

இங்கு கீழ்க்கண்ட பிரச்னைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.வாழ்க்கை சிக்கல்கள், வணிகத் தடைகள்,காதல் & திருமண பிரச்னைகள், குடும்ப சண்டைகள், பகைவர் பிரச்னைகள், உடல் நலப் பிரச்னைகள், கருப்பு மந்திரத் தாக்கங்கள்இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகள்:

துர்தோஷங்களை நீக்கும்

நிம்மதியை வழங்கும்

வெற்றியை உறுதி செய்யும்

குடும்பத்தில் சந்தோஷமும் செழிப்பும் தரும்.

தலைமுறைகளின் நம்பிக்கை மையம்

400 ஆண்டுகளாக, இந்தக் கோயில் பெரும் நம்பிக்கையின் விளக்காக விளங்குகிறது.கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து சுவாமியின் அருளைப் பெறுகின்றனர்.

அருள்பெற்ற பக்தர்கள்

சொல்வது

உடைந்த உறவுகள் மீண்டும் சேர்ந்தது

நிதிப் பிரச்னைகள் தீர்ந்தது

பகைவர்கள் அடங்கி நின்றனர்

கருப்பு மந்திரம் அழிந்தது

உடல்நலம் மீண்டது

சேவா பாரம்பரியம்

இங்கே நடைபெறும் ஒவ்வொரு சேவையும், ஒரு பூஜை மட்டும் அல்ல, சுவாமி மற்றும் பக்தருக்கிடையேயான பந்தம் ஆகும்.

400 ஆண்டுகளாகத் தொடரும் கரணையில் குடும்ப பாரம்பரிய தாந்திரீக முறைகளில் பூஜைகள் நடைபெறுகின்றன.சுவாமியின் பிரசாதம், யந்திரங்கள், பாதுகாப்பு பொருட்கள் உலகெங்கும் பக்தர்களுக்கு அனுப்பப்படுகின்றன.இவைகளை வீட்டு வழிபாட்டில் பயன்படுத்தி, பக்தர்கள் உடனடி பலன்களை பெறுகின்றனர்.

மாதாந்திர சிறப்பு நாள் - அமாவாசை

ஒவ்வொரு அமாவாசை தினமும்,

இக்கோயிலில் மிக முக்கியமான நாள்.

அன்று பூஜையில் கலந்து கொண்டு, வழிபாடுகள் செய்யும் பக்தர்களுக்கு துர்தோஷங்கள் நீங்கி செல்வம் பெருகி சுவாமியின் அனுக்ரஹமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

வருடாந்திர திருவிழா - திரவெள்ளாட்டு மஹோற்சவம்.ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் மூன்று நாட்கள் இக்கோயிலில் திரவெள்ளாட்டு விழா நடைபெறுகிறது.

அந்த நாளில், சுவாமியின் ரூபக்கலம்

(வர்ணப்பொடி வடிவம்) உருவாக்கப்படும்.

அந்த ரூப கலத்தில் இருந்து வர்ணப்

பொடியை வீட்டில் தெளிப்பது

தீய சக்திகளை நீக்கும்,

செல்வம், பாதுகாப்பு தரும்.

குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் வழங்கும் கருவண்ணூர் கரணையில் தேவஸ்தானம் நமக்கு நினைவூட்டுவது: எந்த பிரச்னையும் நிரந்தரமில்லை.சுவாமியின் அருளால் சாத்தியமில்லாததும் சாத்தியமாகும். நம்பிக்கை, பக்தி, சேவைகள் - சமாதானம், செல்வம், வெற்றி ஆகியவற்றின் கதவுகளைத் திறக்கும். கருவண்ணூர், சிறியப்பாளம், திருச்சூர், கேரளா - நம்பிக்கையும் சக்தியும் கூடும் தலம். பிரச்னைகளுக்கு நல்ல பலன்கள்.

அனுஷா