Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புனர்பூசம்

நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு ஏழாவது வரக் கூடிய நட்சத்திரம் புனர்வசுவாகும். இதனையே நாம் புனர்பூசம் என சொல்கிறோம். புனர்வசு என்பதை புனர் + வசு என்று பிரித்தறியலாம். வசு என்பதற்கு பிரகாசம் என்ற பொருளும் உண்டு. அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரகாசம் உடையவர்களாக இருப்பர். புனர் மற்றும் வசு என்பதற்கு அருளைப் பெறுதல் அல்லது புதுப்பித்தல் என்று பொருள்படும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன்னையும் புதுப்பித்து இந்த உலகத்தையும் புதுப்பிக்கும் வல்லவர்கள். ஆனால், ரொம்ப நல்லவர்கள். இது இரட்டை வீண்மீன் ஆகும். மிதுனத்தின் இரட்டைத் தன்மையின் அடையாளமாக உள்ளது.இந்த நட்சத்திரத்தின் அதிபதி குருவாக இருப்பதால் இதன் பலன்கள் ஏராளம். புனர்பூச நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் பிண்டிகார், திரள்,மூங்கில், மாலை, கரும்பு, ஆவணம், விண்டம், புனர்தம் ஆகியன... இந்த நட்சத்திரம் அடையாளம் மற்றும் சின்னமாக வில் ஆகும்.

புனர்பூசம்- விருட்சம் : முங்கில்

புனர்பூசம் - யோனி : பெண்யானை

புனர்பூசம் - பட்சி : ஆந்தை

புனர்பூசம் - மலர் : மரிக்கொழுந்து

புனர்பூசம் - சின்னம் : வில்

புனர்பூசம் அதிபதி : வியாழன்

புனர்பூசம் - அதிதேவதை : அதிதி

புனர்பூசம் கணம்: தேவ கணம்

புனர்பூசம் அதிதியும் - ராமபிரானும்

புனர்வசு அதிதேவதையான அதிதி பல தேவதைகளின் தாயாக இருக்கிறாள்.

இந்த தேவதைகளை மகிஷாசுரன் மறைக்கப்படுகிறார்கள். ஆகவே, அதிதி விஷ்ணுவை தொடர்பு கொண்டு நடந்ததை சொல்கிறாள். விஷ்ணுவும் அதிதிைய சமாதானம் செய்கிறார். அசுரனை கொல்ல உங்கள் வயிற்றில் பிறப்பதாக வாக்கு கொடுக்கிறார். பின்பு அதிதி மகனாக பிறந்து வாமனனாக பிறப்பெடுக்கிறார். வாமனன் அசுரனுடன் போரிட்டு மூன்று உலகங்களையும் கைகொண்டு மீண்டும் புனர்வசுவிற்கு பொலிவடையச் செய்கிறார்.ஒரு நட்சத்திரம் பல அவதாரங்களை கொண்ட நபர்களை காட்டும். ஆனால், ஒரு அவதாரத்தால் ஒரு நட்சத்திர மானது பெருமை கொள்ளுமாயின் அது புனர்வசுதான். ஆம், ராமபிரான் அவதரித்த நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தின் குறியீடு போலவே அவர் வாழ்ந்தார் என்றால் அது கண்டிப்பாக மிகையில்லை. புனர்பூச நட்சத்திரத்தின் அடையாளமே வில்தான். அந்த சிவதனுசுவை வளைத்தார் சுயம்வரத்தில் சீதையை கரம் பிடித்தார். சிவதனுசுவை எடுத்து அம்பு எய்துவதுதான் போட்டியாக இருந்தது. ஆனால், சிவதனுசுவை உடைத்தெறிந்தார். தன் கையால் பங்கமான ஒரு பொருளால் யாருக்கும் தீங்கு நேரிடக்கூடாது என்ற உயர் எண்ணத்தால் சிவதனுசுவை தகர்த்தார்.

வில்லைக் கொண்டே மஹா சிவபக்தனான அண்டசராசரங்களையும் அடக்கி ஆளும் இராவணனை வதம் செய்தார். அந்த வில் ெகாண்டு தான் இழந்ததை மீண்டும் திரும்பப் பெற்றார். வில் அம்புகளால் வாலியை வதம் செய்து சுக்ரீவனையும் பெற்றார். அனுமனையும் பெற்றார். அனுமனின் அளவுகடந்த அன்பால் பக்தியால் ராமபிரான் அனுமனின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்தார். என் பத்தினியை தேடும் சிறந்த நபர் அனுமன் மட்டுமே என்று நம்பினார். காட்டிற்கு வந்து பதினான்கு வருடம் (14) வனவாசம் கடந்து மீண்டும் அரியணை ஏறினார்.

பொதுப்பலன்கள்

நேர்மையையும் ஒழுக்கத்தையும் கைவரப் பெற்றவர்கள். உடைபட்ட நட்சத்திரம் போலவே இவர்களின் வாழ்விலும் மாற்றங்களும் ஏற்ற இறங்கங்களும் கட்டாயம் உண்டு. ஆனால், போராடி வெற்றி பெறும் துணிச்சல் இவர்களுக்கு உண்டு. துவண்டு போக மாட்டார்கள். ஆன்மிக நாட்டம் கொண்டவர்கள். தன் மனைவியின் அன்பைப் பொழிபவராக இருப்பர். காலபுருஷ அமைப்பில் உபஜெய ஸ்தானத்தில் இந்த புனர்வசு மூன்றாம் பாவகத்திலும் நான்காம் பாவகத்திலும் அமைகிறது. ஆகவே, திருமணம் மற்றும் கிரகப்ரவேசம் செய்வதற்கு சரியான நட்சத்திரம். புதிய முயற்சிகளை இந்த நட்சத்திரத்தில் எடுப்பது வெற்றியைக் கொடுக்கும். வங்கி தொடர்பான முயற்சிகளை இந்த நட்சத்திரத்தில் எடுப்பது வெற்றியையும் நன்மையையும் தரும். புனர்பூசம் வலிமையாக ஒரு கிரகம் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு உள்ளுணர்வுத் திறன் அதிகமாக இருக்கும். ஆகவே, எதனையும் யூகித்து கண்டறியும் ஆற்றலை பெற்றவர்களாக இருப்பர். கடகத்திற்கு புனர்பூசம் பிரவேசித்து குரு அமரும்பொழுது உச்சம் பெறும் தன்மையை குரு பெறுகிறார்.எதையும் விட்டுக் கொடுக்கும் பரந்த மனம் படைத்தவர்களாக இருப்பர்.

தொழில்

எடுத்த வேலையை முழுமையாக செய்து முடிக்க முயற்சியை எடுத்துக் கொண்டே இருப்பார்கள். பொருளாதாரம் மற்றும் கணக்கியல் துறைகளாக இருந்தால் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். வங்கியாக இருந்தால் பொருளாதாரத்தை திறம்பட கையாளும் அமைப்பை பெற்றவர்களாக இருப்பர். ஆசிரியர் மற்றும் கல்வித்துறை போன்றவற்றை நிர்வகிப்பதில் வல்லவர்கள். குறுக்குவழி இவர்களுக்கு தெரியாததால் எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதே நட்சத்திரத்தில் வியாழனும் சந்திரனும் இருக்கப்பெற்றவர்கள் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் திறனும் எந்தப் பிரச்னையையும் எளிதாக கையாளும் லாவகமும் கைவரப் பெற்றவர்கள்.

ஆரோக்கியம்

புனர்பூசம் நட்சத்திரக்கார்களுக்கு பித்தம் தொடர்பான பிணிகளும் கொழுப்பு மற்றும் சர்க்கரைநோய் தொடர்பான பிணிகளும் ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.

புனர்பூச வேதை நட்சத்திரம்

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தும் நட்சத்திரமாகும். மிதுனம் ராசியில் உள்ள பாதங்களுக்குத் திருவோணம் வேதையாகவும் கடக ராசியில் உள்ள பாதத்திற்கு உத்திராடம் வேதையாகவும் வருகிறது.

புனர்பூச நட்சத்திரப் பரிகாரம்

இந்த நட்சத்திரத்திற்கு அதிதேவதையாக தேவர்களின் தாயாக அதிதி வரு கிறது. ஆகவே, வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் பாதையில் வாணியம்பாடி அருகே அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. புனர்பூச நட்சத்திரத்திற்குரிய நாளில் வழிபடும்போது உங்களின் தோஷங்கள் குறையப் பெற்று உங்கள் வாழ்வில் புதிய திருப்பங்கள் உருவாகும்.