Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுவாபுரி முருகன் திருக்கோயில்

மானுடம் பல பருவங்களைக் கடக்கும் பொழுது பல தேவைகளும் பல சிந்தனைகளும் ஏற்படுவது இயற்கைதான். இந்த சிந்தனைகள் அடிப்படையில் தேவைகளும் உண்டாகிறது. அதுபோலவே, ஆரோக்கியம், தனம், திருமணம் ஆகியவை தேவைகளுக்கு உட்பட்டு இருக்கிறது. அவ்வாறே, ராசி மண்டலங்களுக்குள் இடம்பெறும் இடங்களும் அங்குள்ள கோயில்களும் சக்தி பீடமாக ஜோதிடத்தில் அறியப்படுகிறது. அவ்விடங்களுக்கு செல்லும்போது ஜாதகத்தில் இயக்கத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறே கோயில்கள் வாயிலாக நாம் பெறும் பலன்களை ஜோதிடத்தைகொண்டு அறியலாம்.

ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு அகஸ்தியரின் அறிவுரைப்படி அஸ்வமேத யாகத்தைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக பலிபீடக் குதிரையை அனுப்பி வைக்கின்றனர். அந்த குதிரை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு வரவே அங்கிருந்த லவ - குசா இருவரும் குதிரையை கட்டிப் போட்டு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். இதையறிந்த ராமர் குதிரையை மீட்க லெட்சுமணனுக்கு ஆணையிடுகிறார். லெட்சுமணனால் அக்குழந்தைகளை வெல்ல முடியவில்லை. இறுதியில் ஸ்ரீராமர் வரவே சிறுவர்களான லவ குசனுடன் போர் புரியவே இது சிறுவா பொற் புரி என அழைக்கப்பட்டது. பின்நாளில் சிறுவாபுரி என மருவியது.

முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்வதற்கு செல்லும் வழியில் சிறுவாபுரியில் இளைப்பாறிச் சென்றார். இந்த ஆலயத்தில்தான் இந்திரன் மற்றும் தேவர்களுக்கு வீடுபேறு கிடைக்க வேலவன் அருள் புரிந்தார் என தலபுராணம் கூறுகிறது. அருணகிரி நாதர் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

இத்தலத்தில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமியாக உள்ளது செவ்வாய், சுக்ரன், சனி, குருவாக ஆகியவை பெயர் கொடுத்திருக்கிறது.

ஜாதகத்தில் செவ்வாய் - சனி இணைவுள்ளவர்கள் இங்கு வந்து கொண்டைக்கடலை வைத்து நெய்வேத்தியம் செய்தால் நற்பலன்கள் பலவற்றை அனுபவிக்கலாம்.

♦ மிதுன லக்ன மற்றும் கன்னியா லக்ன ஜாதகர்கள் பிள்ளை வரம் வேண்டுவோர் சஷ்டி திதி அன்றோ அல்லது புனர்பூசம் நட்சத்திரம் அன்றோ இரட்டை வெற்றிலை இரட்டை வாழைப்பழம் வைத்து நெய்வேத்தியம் செய்தால் இரட்டைக் குழந்தைகள் பிறக்க வரம் கிடைக்கும்.

♦ பரணி நட்சத்திரத்தன்று கஸ்தூரி தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்தால் நாடாளும் வாய்ப்புகளை சிறுவாபுரி முருகன் அருள்புரிவார். தனம், கீர்த்தி, கோவிருத்தி உண்டாகும்.

♦ உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று பன்னீர் திராட்சை சாற்றினால் அபிஷேகம் செய்தால் வழக்குகள் மற்றும் தாய் வழி சொத்துகளில் உள்ள பிரச்னைகள் சீராகும்.

♦ அனுஷம் நட்சத்திரத்தன்று பேரீச்சம்பழம் சாற்றினால் அர்ச்சனை செய்தால் சத்ருக்கள் இருக்கமாட்டார்கள். மறைந்திருந்து தொந்தரவு செய்யும் சத்ருக்களும் விலகிவிடுவார்கள்.

♦ புனர்பூசம் நட்சத்திரத்தன்று மஞ்சள் தீர்த்தத்தில் வித்யா குங்குமம் கலந்து அபிஷேகம் செய்தால் சுபகாரியங்கள் கைகூடும்.

♦ வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் நாட்டு அத்திப்பழம் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தால் தனம் வரும். அதே போல், வெள்ளை மொச்சை பயிரை சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தால் திருமணத் தடைகள் விலகும்.