தற்போது பெரும்பாலான மக்களுக்கு தலையாய பிரச்னையே கடன்தான்.
‘‘கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்’’
- என்ற வரிகளை கம்பர் தனது கம்பராமாயணத்தில் குறிப்பிட்டிருப்பதிலிருந்து கடன் பிரச்னை உள்ளோரின் துயர மன நிலையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
கடன் பிரச்னை, கந்து வட்டி கொடுமையால் நாட்டில் தனது உயிரை மாய்த்தோர் ஏராளம். கடன் தொல்லையால் ‘‘குடும்பத்துடன் தற்கொலை’’ என்ற செய்திகளை தினசரி நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் நாம் அதிகம் பார்க்க முடிகிறது.
கடன் ஏற்பட ஜோதிடரீதியான காரணங்கள்
ஒரு ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6-ஆம் பாவகம் கடன் பிரச்னையை, தரக்கூடிய இடமாக விளங்குகிறது.6-வது பாவக அதிபதியின் தசா புத்தி காலங்களில் கடன் பிரச்னை ஏற்படுகிறது. மற்றும் 6-ஆம் பாவகத்தில் நின்ற கிரகங்களின் தசா புத்தி காலங்களிலும் கடன் பிரச்னை ஏற்படுகிறது. பொதுவாக, எந்த லக்னமானாலும் புதன் தசா காலங்களில் கடன் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.
6-ஆம் பாவக அதிபதி லக்னாதிபதி, 6-ஆம் பாவகத்தை பார்த்த கிரகங்கள் என பிற விஷயங்களை கவனிப்பதன் மூலம் கடன் எப்படி நிகழும்? அதற்கான தீர்வு என்ன? என்பவற்றைப் பற்றி
அறியலாம்.6-ல் சுப கிரகங்கள் இருந்தால், கடன் சமாளிக்கக் கூடிய அளவில் இருக்கும். அசுப கிரகங்கள் இருந்தால் கடினமான அளவுக்கு மீறிய கடனாக இருக்கும்.ஒரு ஜனை ஜாதகத்தில் 6-ஆம் பாவக அதிபதி வலுப்பெறக் கூடாது. அதாவது, ஆட்சி, உச்சம், வர்க்கோத்தம் நிலைகளில் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், கடன் பிரச்னை அதிகமாக இருக்கும். 6-ஆம் பாவக அதிபதி வலுகுறைந்த காணப்படுவது நல்லது.
எப்பேர்பட்ட கடனும் விரைவில் தீர 12-ராசியினருக்கான சக்தி வாய்ந்த
பரிகாரங்கள்.
1. மேஷம்
திங்கட்கிழமை தோறும் இரண்டு சதுர வடிவ கருப்பு துணி எடுத்து ஒன்றில் மிளகு 50 கிராம், மற்றொரு துணியில் முழுதாக இஞ்சியை வைத்து கட்டி, அருகில் உள்ள ஆறு, ஏரி, கிணற்றில் போட்டு வர, கடன் தீரும். புதன்கிழமை தோறும் துளசியை பெருமாளுக்கு சமர்ப்பித்து வணங்கி வருவதன் மூலம் கடன்பிரச்னைகள் குறையும்.
2. ரிஷபம்
சிவன் கோயிலுக்கு சென்று அங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி & நவமி நாட்களில் அகல் விளக்கில் நல்லெண்ணெய் சிறிது கருப்பு எள் கலந்து தீபம் ஏற்றி வர, கடன் தீரும்.
3. மிதுனம்
சமயபுரம் கோயிலுக்கு சென்று மடிப்பிச்சை எடுத்து, அதில் 11 ரூபாய் மட்டும் அங்குள்ள உண்டியலில் செலுத்தி விட்டு, மீதி பணத்தில் பொங்கல் விட்டு, ஏழை, எளியோருக்கு தானம் தர, கடன் தீரும்.
4. கடகம்
உயிரோடு உள்ள நண்டுவை பேரம் பேசாமல் வாங்கி, அதை உங்களுடைய கைகளால் கடல் அல்லது ஆற்றில் விட்டு வர கடன் தீரும். கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சென்று வருவதன் மூலம் கடன் பிரச்னைகள் குறையும்.
5. சிம்மம்
மாதம் ஒருமுறை பெருமாள் கோயிலை கூட்டி, பெருக்கி சுத்தம் செய்து வர, கடன் தீரும்.
6. கன்னி
வக்கீல்களுக்கு பேனாவை தானமாகக் கொடுத்து வர, கடன் தீரும். கன்னி தர்மபுரி அதியமான் கோட்டை கோயிலுக்கு சென்று கால பைரவரை தரிசித்து வருவதன் மூலம் கடன் தொல்லை நீங்கும்.
7. துலாம்
பச்சரிசி மாவினால் மாவிளக்கு செய்து, மாரியம்மன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றாமல், அங்குள்ள எறும்புக்கு உணவாக இட்டு வர, கடன் தீரும்.
8. விருச்சிகம்
சென்னை காளிகாம்பாள் அல்லது வீட்டின் அருகில் உள்ள காளிக்கு வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை விளக்கேற்றி வர, கடன் தீரும்.
9. தனுசு
மருதாணி இலைகளை அரைத்து தாய்மாமன் அல்லது மாமன் முறை உறவு உள்ளவருக்கு கைகளில் வைத்து வர, கடன் தீரும். திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு சென்று வருவதன் மூலம் கடன் பிரச்னை குறையும்.
10. மகரம்
நீங்கள் தூங்கக்கூடிய பாய் & தலையணை பெட்ஷீட்டை உங்களுடைய கைகளால் துவைத்து வர, கடன் தீரும். சென்னை பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலை அரங்கநாத பெருமாளை தரிசித்து வருவதன் மூலம் கடன் தொல்லை நீங்கும்.
11. கும்பம்
தஞ்சை பெரிய கோயிலுக்கு பிரதோச வேளையில் சென்று நந்தி அபிஷேகத்தை பார்த்து வர, கடன் தீரும்.
12. மீனம்
கடல் நீரை பாட்டிலில் பிடித்து வந்து, யாருக்கு நீங்கள் கடன் கொடுக்க வேண்டுமோ, அவரின் பெயரை நீல நிற பேனாவில் எழுதி அந்த கடல் நீரில் 3 முறை நானைத்து எடுக்க, கடன் தீரும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று வருவதன் மூலம் கடன் பிரச்னைகள் தீரும்.
ஜோதிடர் S. தனபாலன்