* தமிழ்நாட்டில், திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் அருகில் இருக்கும் ஊர், உத்தமர் கோயில். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் மனைவியர்களான லட்சுமி, சரஸ்வதி மற்றும் பார்வதி தேவியுடன் அருள்பாலிக்கின்றார்கள். ஆகவே, தேர்வு காலங்களில் மாணாக்கள் இக்கோயிலுக்கு வந்திருந்து, தாங்கள் கொண்டு வந்த பேனாவை சரஸ்வதிதேவியின் பாதத்தில் வைத்து வழிபட்டு செல்வார்கள். இங்குள்ள கல்வெட்டுகளின்படி, சோழ மன்னர் கேசரி வர்மன், பாண்டிய மன்னர் சுந்தர பாண்டியன் ஆகியோர் இந்த கோயிலுக்கு பங்களித்துள்ளனர்.
* தெலுங்கானா மாநிலம், பாசார் என்னும் இடத்தில், கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளது `ஞான சரஸ்வதி கோயில்’. இக்கோயிலில், குழந்தைகளுக்கு அக்ஷராப்யாசம் அதாவது கல்வி தொடங்குதல் (வித்தியாரம்பம்) செய்வதற்கு ஏராளமானோர் வருகின்றார்கள்.
* கர்நாடக மாநிலத்தில் இருக்கக் கூடிய `சிருங்கேரி சாரதாம்பா கோயில்’, 8 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியரால் நிறுவப்பட்டது. இக்கோயிலும்கூட முக்கிய கல்விக்கு அதிபதியாக பார்க்கப் படுகிறது. சரஸ்வதி, விஜயதசமி ஆகிய நாட்களில் இந்த கோயிலில் ஏராளமானோர் வருகை தருகின்றார்கள்.
* சென்னை, போரூரில் உள்ள துர்கா லட்சுமி சரஸ்வதி கோயில், தி.நகரில் உள்ள சிருங்கேரி சாரதா பீடம் கோயில் மற்றும் ஆதம்பாக்கத்தில் உள்ள பாண்டுரங்கன் கோயிலில் தனி சந்நதி ஆகியவற்றில் சரஸ்வதி தேவி வழிபாட்டைக் காணலாம். இக்கோயில்களில் சரஸ்வதிபூஜை அன்று விசேஷ அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.
*கேரளா மாநிலத்தில், பனச்சிக்காடு என்னும் இடத்தில், `தட்சிண மூகாம்பிகை கோயில்’ உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் மிக முக்கிய திருவிழாவாக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடைபெறும் சரஸ்வதி பூஜை ஆகும். மேலும், நவராத்திரி விழா இங்கு மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
*தமிழ்நாட்டில் உள்ள `கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்’, சரஸ்வதி தேவிக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட, ஒரு குறிப்பிடத்தக்க கோயிலாகும். கொல்கத்தாவில் ஆதி பராசக்தியின் அவதாரமான சரஸ்வதிதேவி, கூத்தனூரில் சரஸ்வதியாகவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாலட்சுமியாகவும் உருவானதாக கூறப்படுகிறது.
* ராஜஸ்தான் மாநிலம், புஷ்கரில் சரஸ்வதி கோயில் மிகவும் பிரபலம். இக்கோயில், அற்புதமான கட்டிடக்கலையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்த கோயில், உலகம் முழுவதிலுமுள்ள சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. கல்வி, ஞானம், கலை, இசை, ஆகியவற்றுக்காக இந்த சரஸ்வதி தேவியை பிரார்த்தனை செய்கிறார்கள்.
* தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில், கும்பேஸ்வரர் கோயில் முக்கிய சிவபெருமான் கோயிலாக பார்க்கப்படுகிறது. இந்தக் கோயிலில், கல்வி தெய்வமான சரஸ்வதி தேவிகென்று தனி மண்டபமும் உள்ளது. அதனால், கல்வி அறிவு வேண்டுவோர் இங்கு அதிகளவில் வருகின்றார்கள். மேலும், இந்த கோயிலில் உள்ள அழகிய சிற்பங்கள், காண்போரை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.