Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சேலம் கந்தாஸ்ரமம் முருகன் கோயில்

இந்தியாவில் மட்டும் ஜோதிடத்திற்கு ஒரு தனித்துவம் உண்டு. காரணம் ஜோதிடத்தை வெற்றுக் காகிதமாக பார்க்காமல் அதில் உள்ள கிரகங்களை வைத்து ஒரு தனிநபரின் பூமியில் அவர் தொடர்பு கொள்வதற்கான சாட்சியங்களை கண்டு, அந்த சாட்சியங்களை நிகழ்வோடு ஒப்பிட்டு உணர்வதற்கான நிதர்சனமான அமைப்பை உணர முடிகிறது. அந்த வகையில் கோயில்களும் அதில் வீற்றிருக்கும் தெய்வங்களும் தொடர்புடையவனவாக உள்ளன. ஸ்ரீ மத் சாந்தானந்தா சுவாமிகளின் கனவில் வந்த முருகர் தன்னை குறிபிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு அருளாசி வழங்கினார். முருகன் சொன்ன இடத்தை தேடி பல காலம் அலைந்தார் சாந்தானந்தா சுவாமிகள். இறுதியில் சில காலம் கழித்து ஒரு இடத்தை வந்தடைந்தார் அந்த இடம் கனவில் முருகன் சொன்ன இடம் போலவே இருக்கவே அவ்விடத்தில் முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். இக்கோயிலில் உள்ள தனிச்சிறப்பு என்னவெனில், தாயான பார்வதி தேவியும் முருகப் பெருமானும் எதிரெதிர் சன்னதியில் இருப்பதுதான். வேத விநாயகர், ஆதிசங்கரர் உட்பட பல விக்ரங்கள் அழகுற மொத்தமாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது. 16அடி உயர தத்ரா த்ரேயா பகவான் குரு அருள் உள்ளனர். சொர்ண ஆகர்ஷண பைரவர் ஸ்தலத்தில் உள்ளார்கள். இங்கு கார்த்திகை தீபம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி மற்றும் கேது ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.

* பூரம், பரணி நட்சத்திரத்தன்று சுவாமியை வழிபட்டு விபூதி அபிஷேகம் அல்லது அர்ச்சனை செய்து சுவாமியை வலம் வந்து அம்பாளையும் வலம் வந்து செந்தாமரைப் பூவினை கோயிலுக்கு வரும் கன்னிப் பெண்களுக்குத் தானமாக வழங்கினால் எப்பேர்பட்ட திருமண தோஷம் விலகி திருமணம் கைகூடும். முருகப் பெருமான் உங்கள் காரியங்களை முன்னெடுத்துச் செய்வார் என்பது ஐதீகம்.

* அனுஷ நட்சத்திரத்தன்று படிக்கும் பெண்கள் மற்றும் கல்யாணம் ஆகாத பெண்கள் சுவாமியையும் தாயாரையும் தரிசனம் செய்து இங்குள்ள துறவிகளுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றால் பெரிய ஏற்றத்தை வாழ்வில் பெறுவார்கள். திருமணத் தடை உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும்.

* அவிட்டம் நட்சத்திர நாளில் கரும்புச் சாறில் அபிஷேகம் மற்றும் கொண்டைக் கடலையில் நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கினால் சொத்து பிரச்னை தீரும். கட்டிடத் தொழில் துறையில் வளர்ச்சிக் காண்பார்கள்.

* சித்ரா பௌர்ணமி கந்தாஸ்ரமத்தில் தங்கி சுவாமி தரிசனம் செய்து வந்தால் எப்படிப்பட்ட பிணியும் நீங்கி செல்வம் அதிகரிக்கும். குபேரனின் சம்பத்தை பெறுவார்கள். விசாக நட்சத்திர பௌர்ணமி அன்று செய்வதும் இதே போன்று சிறப்பான பலன்களைத் தரும்.

* கல்வியில் குழந்தைகள் சிறந்து விளங்க இக்கோயிலில் பேரீச்சம் பழமும், செவ்வாைழ பழமும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து ஒரு மணி நேரம் அமர்ந்தால் ஞாபக சக்தி பெருகி வளர்ச்சி பெறுவார்கள்.

* உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி தாயாருக்கு எலுமிச்சை மாலை கொடுத்து வழிபட்டால் சொத்து பிரச்னையில் தீர்வுகள் உண்டாகும். வழக்குகள் இருந்தால் முடிவுக்கு வரும்.

* அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி - கேது தொடர்புடையவர்கள். இங்கு தரிசனம் செய்து பெரியவர்களின் ஆசி பெற்றால் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். வீட்டில் லட்சுமி கடாட்சமும், ஐஸ்வர்யம் பெருகும்.

*முருகன் தன்னைத்தானே சுட்டிக்காட்டியதால் சனி - கேதுவிற்கான சிறப்பான திருத்தலமாகும். இத்தலம் அழகும், அருளும், ஆனந்தமும் நிரம்பப் பெற்ற பிரச்சித்தி பெற்ற ஸ்தலமாகும்.

ஜோதிட ஆய்வாளர் திருநாவுக்கரசு