Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜயோகம் தரும் ராகு - கேது

ஜோதிடத்தின் புரியாத புதிர் ராகு- கேதுக்கள். ராகு -கேது என்றாலே மக்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பயமும் பதட்டமும்தான். பிறப்பு லக்னத்தில், ஏழாம் இடத்தில் இரண்டு, எட்டாம் இடங்களில் மற்றும் நான்கு, பனிரெண்டாம் இடங்களில் ராகு கேதுக்கள் இருந்தால் மற்றும் ராகு-கேதுக்களில் அனைத்து கிரகங்களும் அடங்கி இருந்தால், அவை நாகதோஷமாகவும், கால சர்ப்ப தோஷமாகவும், ராகு-கேதுக்கள் பிரச்னைகளை தருவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பிறப்பு லக்னத்தில் ராகு-கேதுக்கள் இருக்கக்கூடிய ஜாதகருக்கு, 20 முதல் 30 வயது காலகட்டத்தில் ராகு-கேது தோஷங்கள் செயல்படாது. காரணம், தற்போதைய வயதுக்குறிய லக்னம் 3 ராசி கட்டங்கள் நகர்ந்து, அட்சய லக்னம் மாறி வரும்போது, ராகு-கேதுக்கள் 5,11 ஆம் இடங்களில் இருக்கும். தற்போது அவர்களுக்கு ராகு-கேதுக்களால் நன்மையே நடக்கும். அதனால் ராகு- கேதுக்களை இன்றைய வயதின் அட்சய லக்னத்தில் இருந்து எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

அதேபோல், கால சர்ப்ப தோஷம், அட்சய லக்ன நட்சத்திர புள்ளிகளாக ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம் மற்றும் மூலம் இந்த நட்சத்திரங்களில் சென்றாலோ, ராகு-கேதுக்களின் திசா நடந்தாலோ மட்டும்தான் பாதிப்பை ஏற்படுத்தும். மற்ற நேரங்களில் ராகு-கேதுக்களால் பிரச்னை கிடையாது. மேலும், ராகு-கேதுக்கள் ராஜயோகத்தை அள்ளித் தருவதில் பெரும் பங்கு வகிக்க கூடியவர்கள். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும், பிரமாண்டமான யோகத்தையும் தருவதில் ராகுவுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. அதேபோல், ஆன்மிக மார்க்கத்தில், அக ஞானத்தை உணர வைப்பதில், கேதுவுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. அதனால் உங்கள் ஜெனன ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் இருப்பைக் கண்டு பயப்பட வேண்டாம்.எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் எதிர்பார்ப்பு இல்லாமலும், எதிர்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் தேவையான அளவுக்கு எதிர்பார்ப்புடனும் இருந்தால், திருமண வாழ்வு சிறக்கும். வளரும் லக்னமாக அட்சய லக்னத்திற்கு பலன் பார்த்தோம் என்றால், வாழ்க்கை மாறும். இந்த ஜாதகத்தில் ராகு-கேது தோஷம் இருக்கிறது.

ராகு - கேது பற்றி பொதுவாக ஜாதகத்தில் ராகு கேதுக்கள் இரு துருவங்களாக செயல்பட்டு பூர்வ புண்ணியத்தின் கர்ம வினைகளை, இடத்திற்கு அல்லது வயதிற்கு தகுந்தாற்போல் அதனுடைய பலா பலன்களை அப்படியே கொடுக்கும். தாத்தா, பாட்டியின் பிரதிபலிப்பே ஒரு மனிதனுடைய பூர்வ புண்ணியமாக கருதப்படுகிறது. தாத்தா, பாட்டியின் செயல்களின் பிரதிபலிப்பை பேரன் - பேத்தி அனுபவிப்பார்கள். தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், கர்ம வினைகள் குறிப்பிட்ட காலத்தில் நல்லவைகளையும், குறிப்பிட்ட காலத்தில் தீயவைகளையும், உணர்த்துவதிலும் உணர வைப்பதிலும் ராகு-கேதுக்களே முதன்மையானது, ஒருவருடைய மனநிலையில் அகம் புறம் சார்ந்த செயல்பாடுகளிலும்கூட ராகு- கேதுக்களின் பங்கு அதிகம் உண்டு.

வெளிப்புற பொருட்கள் வாங்குவதில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள், பேராசைகள் காரணத்தால், உடலின் புறப்பொருட்கள் மூலமாக தண்டனை அனுபவிப்பார். இதுவே ராகுவின் தன்மை, இது ஒரு மாயை. உதாரணமாக, ஒரு ஆண் வரதட்சணையாக 100 சவரன் தங்கநகை வேண்டும் என்று பேராசைப்படுகிறான். அதனால் அந்த திருமணம் தடையாகிறது. ஒரு ஜாதகர், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நல்ல வரன் அமைந்தால் போதும் எனக் கூறுவதால், (எதிர்பாலினர்) ஆணிடமோ பெண்ணிடமோ ஏதோ ஒரு குறை உள்ளது என்ற சந்தேகத்திற்கு ஆளாகிறார்கள். அதுவே மிகப் பெரிய தடையாகிறது. ஆக, பேராசையும் சந்தேகமும் ராகு-கேதுக்களுடைய

தன்மையாக மிகப் பெரியத் தடையை ஏற்படுத்துகிறது.