Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர்

ஆற்றல்கள் பல உள்ளன. அறிவியலின் கூற்றுப்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ இயலாது. ஆனால், ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக பரிமாற்றம் செய்யலாம் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்கிறது. ஆற்றலை உணரும் தன்மையில் மட்டுமே உள்ளோம்.இறை சக்தியும் பல்வேறு ஆற்றல் வடிவங்களாக கோயிலில் வீற்றிருக்கிறது. நமக்கு தேவையானவற்றை தேவையான இடத்தில் தக்க தருணத்தில் நாம் வேண்டிப் பெறுவதுதான் கோயிலில் உள்ள தெய்வங்களின் மகிமைகள் ஆகும்.

ஹிரண்ய சம்ஹாரத்திற்குப் பிறகு முதன் முறையாக அகோபிலம்  நரசிம்மர் பூவரசன் குப்பத்தில் அதே திருக்கோலத்தில் அவதரித்து சப்தரிஷிகளுக்கு தரிசனம் கொடுத்தார். அகோபிலம் செல்லமுடியாதவர்கள் பூவரசன் குப்பம் சென்று தரிசிக்கலாம். இதனை தக்‌ஷிண அகோபிலம் என்றழைப்பார்கள். இத்தலத்தில் உள்ள சிறப்பு என்னவெனில், மகாலெட்சுமியின் ஒரு கண் சுவாமியை நோக்கியும் மற்றொரு கண் பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு இருக்கும். தமிழகத்தில் உள்ள அஷ்ட நரசிம்ம ஸ்தலங்களில் இது மிகவும் பழமையான தாகும்.இங்குள்ள தெய்வங்களுக்கு நாமகரணம் செய்துள்ள கிரகங்கள் சூரியன், செவ்வாய், சுக்ரன் மற்றும் சனி ஆகும்.

*அவிட்டம் நட்சத்திர தொடங்கி 48 நாட்கள் தொடர்ந்து இக் கோயிலில் நெய் தீபம் ஏற்றி எள்ளுருண்டை தானமாக கொடுத்தால் எப்படிப்பட்ட கடனும் தீரும் திரும்ப கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படாது.

*ரோகிணி நட்சத்திரத்தன்று மூன்று நீர் நிலைகளில் எடுத்து வந்து அந்த புனித நீரை அனுஷ நட்சத்திர நாளில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து செந்தாமரை மலர் மாலை கொடுத்து ஊனமுற்றவர்களுக்கு உணவு கொடுத்தால் கடன்கள் நிவர்த்தி ஆகும்.

*மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திர நாளில் வியாழனும் ராகுவும் தொடர்பு உள்ளவர்கள் இத்தலத்தில் செந்தாமரை மாலையும் கொண்டைகடலையும் நெய்வேத்தியமாக கொடுத்து வழிபட்டால் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்களையும் ஏற்றங்களையும் சந்திப்பார்கள் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

*சுவாதி நட்சத்திர நாளில் சுதர்சன ஹோமம் இத்தலத்தில் செய்தால் எப்பேர்பட்ட திருமணத் தடையும் விலகி திருமணம் விரைவில் கைகூடும் குபேர சம்பத்தும் உண்டாகும்.

*புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை இத்திருக் கோயிலில் முழு நேரமும் அமர்ந்து சென்றால் வீட்டில் சுப காரியங்கள் விரைவில் நடைபெறும்.

*கிருத்திகை நட்சத்திர நாளில் இரண்டு செப்புகாசுகள் வாங்கி சுவாமிக்கு அர்ச்சனை செய்து உண்டியலில் ஒரு காசும் வீட்டில் உள்ள பணம் வைக்கும் இடத்தில் ஒரு காசும் வைத்தால் பணப்புழக்கம் அதிகமாகும்.

*குறிப்பாக இக்கோயிலுக்கு சென்று வந்தபின் யாருக்கும் வெள்ளியை தானமாக கொடுக்கக் கூடாது.

*உத்திரட்டாதி நட்சத்திர நாளில் பார்லி அரிசியில் பால் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செயதால் வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகி சுமுகமாக முடிவுகள் ஏற்படும்.

*பூச நட்சத்திர நாளில் நீல நிற சங்குப்பூவும் வெட்டிவேரில் மாலையும் தொடுத்து சுவாமிக்கு கொடுத்தால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். நீண்டநாள் திருமணம் கைகூடாதவர்கள் செய்தால் திருமணம் விரைவில் நடைெபறும்.

*அனுஷ நட்சத்திர நாளில் வெட்டிவேர் நீரில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை தோல் பிரச்னை உள்ளவர்கள் அருந்தினால் விரைவில் குணமாகும்.

*புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் இத்தலத்தில் அன்னதானம் வழங்கி இரவு தங்கினால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகள் உண்டாகும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் நம்மிடம் குடிகொள்ளும் திருத்தலமாகும்.

ஜோதிட ஆய்வாளர் திருநாவுக்கரசு