Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பங்குனி உத்திரம் அரிய வேண்டிய தகவல்கள்

தமிழ் மாதங்களில் 12வது மாதம் பங்குனி. தமிழ் நட்சத்திரங்களில் 12வது உத்திரம். பங்குனி, உத்திரம்,பெளர்ணமி இணையும் நாளைதான் பங்குனி உத்திரம் என்று குறிப்பிடுவோம். அன்று மிகவும் விசேஷமான நாள். காரணம், நாம் பூஜிக்கும் கடவுள்களான சிவன்- பார்வதி, முருகன்-தெய்வானை, ராமன் - சீதை அவர்களின் திருமண வைபோகம் நடைபெற்றது. மேலும் லட்சுமி பாற்கடலில் அவதரித்த தினமும் அன்றுதான்.

*மன்மதனை எரித்து உஷ்ணத்தில் இருந்த சிவனை சாந்தப்படுத்த அவரை பார்வதி மணந்தார். மன்மதனுக்கு அளித்த தண்டனையால் பாதிக்கப்பட்ட ரதிக்கு

‘உன் கண்ணுக்கு மட்டும் மன்மதன் தென்படுவான்’ என பார்வதி வரம் தந்த நாள்.

*கொள்ளிட ஆற்றங்கரையில் ஸ்ரீ புலீஸ்வரி அம்மனின் ஆலயம் உள்ளது. இங்கு ஒரே சன்னதியில் ஏழு அம்மன்கள் உள்ளனர். அதில் புலீஸ்வரி என்பது வைஷ்ணவி. இங்குள்ள ஸ்தல மரம் வருடத்திற்கு ஒரே நாளான பங்குனி உத்திரம் அன்று மட்டுமே பூக்கும்.

*திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தும்புரு தீர்த்தத்தில் அன்று நீராடுவது மறுபிறவி சுழற்சியிலிருந்து விடுபட உதவும் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

*ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் ஓடும் காவிரியிலிருந்து நீர் எடுத்து வந்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்வர். முத்துக்குமார சுவாமி-வள்ளி தெய்வானை தம்பதியினராக உலா வந்து மக்களுக்கு தரிசனம் தரும் நாள். அன்று பக்தர்கள் முருகனுக்கு பஞ்சாமிர்தம் தயாரித்து, அபிஷேகம் செய்வது வழக்கம்.

*ஆன்மீக பக்தர்கள் இந்த நாளை பசுவாகிய ஆன்மா, பதியாகிய சிவனிடம் இணைவதாக கூறுவர்.

*இன்று பலர் நாள் முழுவதும் விரதம் இருந்து, இரவு பால்-பழம் மட்டும் சாப்பிடுவார்கள். இதனை ‘கல்யாண கந்தரவிரதம்’ என அழைப்பர்.

- ராஜிராதா, பெங்களூரூ.