Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி

இயற்கையே இறைவன். இறைவனே இயற்கை என்றால் அது நிச்சயம் உண்மைதான். எந்த சமூகமாக இருந்தாலும் ஓரிடத்தில் ஒரு கோயில் எழும்புகிறது என்றால் அங்கு ஒரு சக்தி வந்துள்ளது என்று பொருள். இதனை உணர்ந்துகொள்ள ஒரு அனுபவம் நமக்கு தேவைப்படுகின்றது. அந்த சக்தி மனிதத்தையும் மனித சமூகத்தை காக்கிறது. அதுவே கோயில்களாக மாற்றமடைகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். உணர்ந்தறிதல் வேண்டும். அவ்வாறே இறை சக்தியை சரியாக உணர்ந்தவருக்கு இடர்பாடு என்பது என்றுமே இல்லை. இறை உணர்வு என்பது வேறு நமது தேவைகள் ஆசைகள் என்பது வேறு தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கிரகங்கள் வழியே கோயில்களையும் கோயில்கள் வழியே கிரகங்களையும் துல்லியமாக அறிவோம்.கிருதயுகம் - திரேதா யுகம் - துவாபர யுகம் - கலியுகங்களுக்கு முன் மணி யுகம் ஒன்று இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த யுகத்தில் சிவபெருமானுக்கும் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. அத்தருணம், தனக்கும் ஐந்து தலைகள் சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் என சிந்தித்ததால் ஆணவம் தலைக்கேறியது. இந்த ஆணவத்தை நீக்க பார்வதி தேவி சிவபெருமானிடம் முறையீட சிவனும் பிரம்மனை கண்டிக்கிறார். இச்சமயம் சிவனுக்கும் பிரம்மனுக்கும் வாக்குவாதம் முற்றி பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி கொய்து விடுகிறார் சிவபெருமான். கோபமுற்ற பிரம்மன் கிள்ளிய தலை உன் கையில் ஒட்டி நீ உண்ணும் உணவு முழுவதையும் இந்த தலை எடுத்துக் கொள்ளும். நீ பித்தனாக அலைவாய் என சாபமிட்டார்.

ஜோதிடர் திருநாவுக்கரசு