ஆண்டவனின் படைப்பிலேயே, மனிதனின் படைப்புதான் உயர்ந்தது. விசித்திரமானதும்கூட. அதிலும், மனிதன் இறந்ததற்கு பின் சில விசித்திரங்கள் நடக்கின்றன. அந்த சில விசித்திரங்களுள் ஒன்றுதான், மனிதன் இறந்த பின்னர் வெளியேறும் வாயுக்கள் (காற்று). அந்த விசித்திர வாயுக்களை பற்றி இந்த சிறிய கட்டுரையில் காணலாம்.
ஆயுர்வேதம் கூறும் ரகசியம்
மனிதனின் உடலில், ``சமானா’’, ``பிராணா’’, ``உடானா’’, ``அபானா’’, ``வியானா’’ என்னும் 5 வகையான காற்றுக்கள் இருப்பதாகவும், அவையே நாம் உயிருடன் இருக்க காரணமாக அமைகிறது என்றும், ``ஆயுர் வேதம்’’ உறுதிபட தெரிவிக்கிறது. மேலும், இது சம்பந்தமாக இன்றும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது ஆயுர்வேதம்.
வெப்பத்திற்கு இதுவே காரணம்
ஒருவர் இறந்த 21 முதல் 24 நிமிடங்களில் அதாவது ஒருவர் இறந்து அரைமணிநேரத்திற்குள், ``சமானா’’ என்னும் காற்று உடலைவிட்டு பிரிகிறது. இந்த சமானா காற்றுதான், நம் உடலில் உள்ள வெப்பத்திற்குக் காரணமாக அமைகிறது. ஆகையால்தான், இந்த காற்றானது நமது உடலைவிட்டு பிரிந்தவுடன், நம் உடலானது குளிர்ந்துபோய்விடுகிறது. இறந்த ஒருவரின் உடல், குளிர்ந்த நிலைக்கு செல்ல இதுவே காரணமாகும் என்று ஆயுர் வேதம் சொல்கிறது. ஒருவரின் இறந்த உடலை தொட்டுப்பார்த்தால் சில்லென்று இருக்கும்.
முற்றிலும் முடக்கும் காற்று
கிட்டத்தட்ட 48 முதல் 64 நிமிடங்களில் அதாவது ஒருவர் இறந்து ஒரு மணிநேரத்திற்குள், ``பிராணா’’ என்னும் முக்கியமான காற்று வெளியேறுகிறது. இந்த காற்றுதான் ஒருவரின் மூளை செயல்பாடுகளுக்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்த காற்று வெளியேறியவுடன், ஒருவருடைய மூளையின் செயல்பாடுகள் முற்றிலுமாக நின்றுவிடுகிறது.
கூடுதல் எடை
இதற்கு அடுத்தபடியாக, 6 முதல் 12 மணிநேரத்திற்குள், ``உடானா’’ என்னும் காற்று வெளியேறுகிறது. இந்த காற்று, நம் உடலில் கால் பகுதியில் கீழ் நோக்கி செயல்படக்கூடியது. அதாவது, புவியீர்ப்பு விசையுடன் (Gravity) ஒத்துபோய் செயல்படக்கூடியது. இந்த காற்று நம் உடலில் இருந்து வெளியேறிய பிறகு, நம் உடல், புவியீர்ப்பு விசையை எதிர்க்க ஆரம்பிக்கும். இதனாலதான் ஒருவர் உயிருடன் இருப்பதைவிட இறந்த பின், அவரின் எடை அதிகமாக காணப்படுகிறது. ``பொணம் கனகனக்குதுப்பா...’’ என்ற சொல்லாடல் நினைவுக்கு வருகின்றதா..!
இது சென்றால் அசைக்க முடியாது
கிட்டத்தட்ட 8 முதல் 18 மணிநேரத்திற்குள், ``அபானா’’ என்னும் காற்று வெளியேறிவிடும். இந்த காற்று, நம் உடலின் அசைவுகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. அதனால்தான், இந்த காற்று வெளியேறுவதற்கு முன்பாக ஒருவரின் இறந்த உடலில் சில அசைவுகளை கண்டதாக பலரும் கூறுவர். அதற்கு முக்கியமான காரணம் இந்த காற்றுதான். இந்த காற்று உடலில் இருந்து வெளியேறியதும், உடலில் உள்ள அசைவுகள் முழுவதும் நின்றுவிடும். இந்த காற்று வெளியேறுவதற்கு முன்பாக இறந்தவரின் உடலை பார்த்து கைவிரல்கள் அசைகின்றது, காலின் விரல்கள் அசைகின்றன என்றெல்லாம் இன்றும்கூட பேசிப்பார்த்திருப்போம்.
அழுக ஆரம்பிக்கும்
அடுத்ததாக, 11 முதல் 16 நாட்களுக்குள், ``வியானா’’ என்னும் காற்று வெளியேறுகிறது. இந்த காற்றுதான் நம் உடலை பாதுகாத்து வருகிறது. அதாவது, ``Body Preserved’’ மாதிரி. இந்த காற்று வெளியே சென்ற பின், நம் உடலானது கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்கும். பெரும்பாலும், இந்த காற்று வெளியேறுவதற்கு முன்பாகவே இறந்தவர்களை அடக்கம் செய்து விடுகின்றார்கள்.
தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்