Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கொல்கத்தா காளி

(காளியின் பாதி உருவம் கொல்கத்தாவில், மறுபாதி உருவம் அஸ்ஸாமில்!)

கொல்கத்தா என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காளி கோயில் தான். கொல்கத்தாவின் நகர தேவதை காளி.தெற்கு கொல்கத்தாவில் உள்ள காளி கட்டத்தில் ஜன நெருக்கடி அதிகமாக உள்ள பகுதியில் அமைந்திருக்கும். இந்தப் புராதனக் காளிக்கோயில் 1809-இல் சீரமைக்கப்பட்டு விரிவான ஆலயமாக அமைக்கப்பட்டது. வடநாட்டுப் பாணியில் பகோடா விமானம் போல் அமைக்கப்பட்டிருக்கிற இந்தக் கோயிலுக்கு, கிழக்குப் புறத்தில் இரண்டு பிரதான நுழைவாசல்களும், மேற்குப் புறத்தில் ஒரு பிரதான நுழைவாயிலும் இருக்கின்றன.

கிழக்குப்புற நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் பெரிய பிராகாரம் உள்ளது. அதில் ஏறக்குறைய எட்டு அடி உயரத்திற்கு ஒரு பெரிய சலவைக்கல் மேடை. அந்த மேடையில் ஏறித்தான் அம்மன் சந்நதிக்குச் செல்ல வேண்டும்.கிழக்குப் புறம் ஒன்றும் தெற்குப்புறம் இரண்டு ஆக மூன்று இடங்களில் மேடை மேல் ஏறபடிக்கட்டுகள் இருக்கின்றன. படிகளில் ஏறிச் சென்றால் கிழக்குப் புறத்தில் அம்மன் சந்நதிக்குச் செல்லும் நுழைவு வாசலை அடையலாம். இங்கே கோயில் பணியாளர்கள் பக்தர்களை வரிசைப்படுத்தி உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

அம்மனுக்கு முன்புறம் இரண்டு அடி இடைவெளிப்பாதை தான் உண்டு. அங்கு கூட்டமாக இருக்கும் பண்டாக்கள் நம் கையில் சரகுத் தொன்னையில் அம்மனுக்காக நாம் வைத்திருக்கும் பிரசாதத்தை ‘வெடுக்’ கெனப்பிடுங்கி அம்மன் முன்காட்டுவார்கள். கலயத்தில் உள்ள தண்ணீரைத் தலையில் தெளித்துப் பருகக் கையில் கொடுப்பார்கள். அம்மன் நெற்றியில் உள்ள சிந்தூரத்தை எடுத்து நமது நெற்றியில் அப்பிப் பிரசாதத்தைக் கொடுத்து, தமது கையை நீட்டி பத்து முதல் ஐம்பது ரூபாய் வரை தட்சணை கொடுக்கும்படி கட்டாயப்படுத்துவார்கள். புதிதாகக் கோயிலுக்கு வருபவர்களுக்குப் போதும் போதும் என்று ஆகிவிடும்.

இந்தக் கோயிலின் ஒரு சிறப்பு என்ன வென்றால் கருவறையில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிற மூல விக்ரகம் தான் உண்டு. உற்சவர் கிடையாது! வழ வழப்பான கருங்கல்லில் செய்யப்பட்ட பெரிய மூல விக்ரகத்துக்கு இடுப்பு வரை தான் உண்டு. அதாவது பாதி உடல் மட்டும் உணஅடு. இடுப்புக்குக் கீழே உண்ண பகுதி அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காமாட்டிப்பூரில் உள்ள கோயிலில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது அன்னையின் பாதி உடல் இடுப்பு வரை கொல்கத்தாவிலும் (மேற்கு வங்கம்) மீதி உடல் காமாட்டிப்பூர் (அஸ்ஸாம்) கோயிலிலும் உள்ளது.

அன்னையின் வடிவம் காண்போரை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. ஆபரணம் அணியப்பெற்ற நீளமான கருணை பொங்கும் கண்கள். தங்கத்தினாலான நீண்ட நாக்கு. தலையில் மணிமுடி ஆபரணம். அவ்வளவுதான். மீதிப் பாகங்கள் சிவப்புப் புடவை சாத்தி மறைக்கப்பட்டிருக்கும். தெய்வ சாந்நித்யம் நிரம்பி வழியில் சில மணித்துளிகள் சந்நதியில் நிற்கின்ற போது, நம்மை மறந்து, மெய் மறந்து நிற்கின்ற தெய்வீக ஆகர்ஷண சக்தி கொண்டு விளங்குகிறாள் அன்னை காளி’.காளி காவின் கரங்கள் நான்கும் தங்கத்தால் ஆனவை. ஒவ்வொரு தங்கத்தால் ஆனவை. ஒவ்வொரு தங்கக் கரமும் பத்து கிலோ எடை கொண்டது.

கழுத்தில் மாலையிலும் இருக்கும் அசுரர் தலைகள் தங்கத்தால் ஆனவை. காளியின் நாக்கு மற்றும் பற்களும் தங்கத்தால் ஆனவை. அன்னையின் கை விரல்களில் தங்க மோதிரமும் தங்க வளையல்களும் அணிவிக்கப்பட்டுள்ளன. அன்னையின் சிரசில் இருக்கும் கிரீடம், மூக்கில் இருக்கும் புல்லாக்கு ஆகியவையும் தங்கத்தால் ஆனவை. இவை அனைத்துமே வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களால் காணிக்கையாக கொடுக்கப்பட்டவை. அன்னை காளிக்குப் பிடித்தமான ஆயுதம் வாள். இடது கையில் வெள்ளி வாள் ஏந்தியிருக்கிறாள். பக்தர்கள் காளியிடம் வேண்டிக் கொண்டு சக்திக்குத் தகுந்தாற் போல் வெள்ளி, தங்கவாள் செய்து காணிக்கையாக அளிப்பது இங்கு வழக்கமாக உள்ளது.

காளிக்கு புடவை சார்த்துவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர் அனைவருமே சிவப்புப் பூமாலையும் சிவப்புப் புடவையும் சார்த்துகிறார்கள்.

அன்னை காளிக்கு ‘போக்’ என்னும் பிரசாதம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. எல்லா விதமான காய்களும் அரிசியும் போட்டுச் சமைக்கப்படும். அந்த பிரசாதம் அம்பாளுக்கு தினமே படைக்கப் படுகிறது. பின்னர் அதுவே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்ட மாத பௌர்ணமியன்று காளிகாவின் வலப்பாத விரல்களுக்கு ஸ்நானம் செய்விக்கப்படுகிறது. கங்கைநீர், அத்தர், நறுமண தைலம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக நீரை ‘சரணாம்ருதம்’ என்று அழைக்கிறார்கள்.

இதைப் பிரசாதமாக உட்கொள்பவர்களுக்கு நோய்கள் குணமாகின்றன என்று சொல்கிறார்கள்.

மேடையிலிருந்து கீழே இறங்கினால் பெரிய பிராகாரம் பிராகாரத்தில் அம்மன் சந்நதிக்கு முன்னால் பெரிய தொரு மண்டபம். கீர்த்தனை, பஜனை, நாமசங் கீர்த்தனம் போன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது இங்கு நடைபெறுகின்றன. பிராகாரத்தில் மண்டபத்தையொட்டி அம்மன் சந்நதியில் பலிபீடம் உள்ளது. தினந்தோறும் இரவு இங்கு ஆட்டுக்கிடா பலியிடுவது இன்றும் நடந்து வருகிறது. ‘கோயில்களில் உயிர்ப்பலி கூடாது’ என்று ராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், கவியரசர் இரவீந்திரநாத்தாகூர் போன்ற பெருமக்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தும், பல போராட்டங்கள் நடத்தியும் உயிர்ப்பலி இடும் ‘பழக்கத்தை ஒழிக்க முடியவில்லை’ இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது ‘காளிகட்’ என்பது கல்கத்தா என்று மாற்றப்பட்டது. இன்று கொல்கத்தா என்று அழைக்கப்படுகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த காளிகட் ‘காளி மாதா வழிபாட்டைப் பின்பற்றி வந்ததால் தான் ஒரு காலத்தில் வடஇந்தியா முழுவதும் ‘சாக்த வழிபாடு’ எனும் சக்தி வழிபாடு ‘கொடி கட்டிப் பறந்தது’ ஜெகனே பங்காளி ஸேகனே காலிபாரி’ என்ற பழமொழி வங்கமொழியில் உண்டு. அதாவது எங்கெல்லாம் வங்காளிகள் இருக்கின்றனரோ அங்கெல்லாம் நிச்சயமாக காளி கோயில் இருக்கும் என்பதே? இதனால் தான் சக்தி வழிபாட்டின் தலைமையகமாக வங்கமாநிலம் விளங்குகிறது.

கார்த்திகை மாதத்தில் காளி மாதாவை பங்காளிகள் இல்லந்தோறும் வணங்குகிறார்கள். இரவு எட்டு மணி முதல் காலை நான்கு மணி வரை நான்கு முறை பூஜை செய்கிறார்கள்.

மாலையில் லட்சுமி பூஜை நடைபெறும். காளியின் திருஉருவச் சிலை வங்காளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பந்தல் அலங்காரத்துடன் காணப்படும்.வங்காளிகள் கொண்டாடும் மிக முக்கியமான பூஜை ‘துர்க்கா பூஜை’. அது மகாளய அமாவாசையன்று தொடங்குகிறது. நவராத்திரி ஒன்பது நாட்களில் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்களில் விசேஷமாக பூஜை நடைபெறும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, கணபதி, முருகப் பெருமான் ஆகிய ஐவரையும் வைத்து பூஜிக்கிறார்கள். துர்க்கை சிம்ம வாகனத்தில் அமர்ந்து எருமை உருவில் வந்த மகிஷா சுரனை சம்ஹாரம் செய்கிறாள். இந்தத் தோற்றத்தில் தேவியை ஆவாகனம் செய்து வழிபடுகிறார்கள்.

சஷ்டியன்று துர்க்கைக்கு வில்வத்தால் பூஜை செய்கிறார்கள். அஷ்டமியன்று துர்க்கை அன்னபூரணியாக வணங்கப்படுகிறாள். நவமியன்று மகிஷாசுர சம்ஹாரம் நடைபெறுகிறது. மூன்று நாட்களிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனையும் உண்டு.

பிராகாரத்தில் காளி சந்நதிக்கு மேற்குப் புறத்தில் கிருஷ்ணன் சந்நிதி, வடக்குப் புறம் ஸ்தல விருட்சம், அதைச் சுற்றி அமைந்த மேடையில் பெரிய பெரிய சாளக்கிராமங்கள் இருக்கின்றன. அருகில் சிவன் சந்நதி உல்ளது. காளி கோயிலுக்குத் தெற்குப் பகுதியில் காளி கட்ட மயானம் அமைந்திருக்கிறது. இந்து மதத்தில் பிடிப்புள்ள வயதானவர்கள் காலையில் கங்கையில் நீராடி, ஈரத்துணியுடன் காளி கோயிலில் தரிசனம் செய்த பின் பக்கத்திலுள்ள ருத்ரபூமி என்று அழைக்கப்படும் சுடுகாட்டிறகுச் சென்று வழிபட்டு, மயானச் சாம்பலை அள்ளி எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதையும் பார்க்கலாம் ‘இது ஞானபூமி, இங்கு வருவதால் தீட்டு எதுவும் ஏற்படாது’ என்கிறார்கள்.

கோயிலின் கிழக்கில் ‘காளி குண்ட’ என்றழைக்கப்படும் குளம் இருக்கிறது. கங்கை நீரால் நிரப்பப்பட்ட இந்தக் குளத்தில் தான் காளிகாதேவியின் பாத விரல்கள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. பக்தர்கள் இத்திருக்குளத்தில் புனித நீராடி விட்டு அன்னையை தரிசிக்கச் செல்கிறார்கள். ‘ காளிகா காமம்,  சக்தி சங்கம் தந்திரம், குலார்ணவ தந்திரம், யோகினி தந்திரம், மகா நிர்வாண தந்திரம்’ முதலிய நூல்கள் காளி மாதாவைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன.காளிகாட் காளி அம்மனைப் போற்றும் பல கவிதைகள் வங்க மொழியில் ஏராளமாக உள்ளன.

இவற்றில் ‘பிப்ரதாஸ் பாப்லாய் என்ற கவிஞர் கி.பி.1515-ல் இயற்றிய ‘மானஸ மங்கள்’ எனும் கவிதைத் தொகுப்பு, முகுந்தராம் சக்ர போர்த்தி (1577-92) இயற்றிய ‘சண்டி காவியம், கி.பி.1740-உருவான ‘கங்கா பக்திதரங்கிணி’ முதலிய பழைய நூல்கள் காளியின் தோற்றம், கோயிலின் மகிமைகளை விரிவாகக் கூறுகின்றன. 1945-ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு வருகை தந்த புதுக்கோட்டை கவிராஜ பண்டிதர். கனகராஜய்யர் காளி மீது இயற்றிய ‘காளிகா தேவிமாலை’ என்ற அற்புதமான கவிதை நூலை இயற்றி அதை காளி அம்மன் சந்நதியிலேயே அரங்கேற்றம் செய்தது ஓர் அற்புதம். காளியின் உருவமான துர்க்கைக்கு நடைபெறும் பூஜை வங்காலத்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் பண்டிகையாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கலைகளும், விழாவிற்கான உணவுகளைச் சமைக்கும் திறமையும் அதையொட்டி இல்லந்தோறும் புது வடிவம் பெறுகின்றன. காளிகட் அன்னை காளியின் அருள் அனைவரையும் காப்பதாக மக்கள் நம்பி வழிபடுகிறார்கள்!