Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விதியை மாற்றும் திதி வழிபாடு

திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். பௌர்ணமி அன்று இருவரும் நேர் எதிராக அதாவது180 பாகை தூரத்தில் இருப்பார்கள். அதாவது சூரியன் இருந்த ராசியில் இருந்து ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார்.சூரியனிலிருந்து ஒவ்வொரு நாளும் சந்திரன் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதை குறிப்பதே திதியாகும். ஒரு திதிக்கு 12 பாகையாகும். இந்த திதி என்ற வடமொழி சொல்லே திரிந்து தேதி என்று வழங்கலாயிற்று. அமாவாசை அன்று சேர்ந்திருக்கும் சூரியனும் சந்திரனும் பிரதமை அன்று பிரிந்த பின்னர் சேருவதற்கு 30 நாட்கள் ஆகும். இந்த 30 நாட்களும் 30 திதிகளாகும். இந்த 30 திதிகளில் பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் மட்டுமே பெயர் உண்டு. மற்றவைகள் ஒன்று, இரண்டு, மூன்று என்பன குறிக்கும் வடமொழிச் சொல்லால் அழைக்கப்படுகின்றன.

1. ஏகம் (ஒன்று) - பிரதமை

2. துவந்தம் (இரண்டு) - துவிதியை

3. திரயம் (மூன்று) - திருதியை

4. சதுர் (நான்கு) - சதுர்த்தி

5. பஞ்சமம் (ஐந்து) - பஞ்சமி

6. ஷட் (ஆறு) - சஷ்டி

7. சப்த (ஏழு) - சப்தமி

8. அஷ்ட (எட்டு) - அஷ்டமி

9. நவமி (ஒன்பது) - நவமி

10. தசமி (பத்து) - தசமி

11. ஏகம் தசம் (1+10) - ஏகாதசி

12. துவந்தம் தசம் (2+10) - துவாதசி

13. திரயம் தசம் (3+10) -திரயோதசி

14. சதுர் தசம் (4+10) - சதுர்த்தசி

முதலாவது திதிக்கு பிரதமை என்று ஏன் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் வடமொழியில் பிரதம என்றால் முதலாவது என்று பொருள்படும். ஏகம் என்றால் ஒன்று என்று பொருள். திதிகளில் பிரதமை முதலாவது திதியாகும். அதனால் ஏகம் என்ற சொல்லுக்குப் பதிலாக பிரதமை என்ற சொல் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 14 திதிகளில் அமாவாசைக்கு மறுநாள் ஆரம்பித்து பௌர்ணமிக்கு முதல்நாள் முடியும் திதிகள் சுக்கில பட்ச திதிகள் அல்லது வளர்பிறை திதிகள் என்றும் பௌர்ணமிக்கு மறுநாள் ஆரம்பித்து அமாவாசைக்கு முதல் நாள் முடியும் திதிகள் கிருஷ்ண பட்ச திதிகள் அல்லது தேய்பிறை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

வளர்பிறை திதிகள் - 14

தேய்பிறை திதிகள் - 14

பௌர்ணமி - 1

அமாவாசை - 1

ஆக,திதிகள்

மொத்தம் 30

வடநாட்டில் இந்த 30 திதிகள் கொண்டதே ஒரு மாதமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

திதிகளின் சிறப்பம்சங்கள்

பணம், சம்பாத்தியம், சம்பத்து ஆகிய எல்லாவற்றையும் தரக்கூடிய வல்லமை படைத்தவை திதிகள்தான். திதியை வைத்து பெரிய யோகங்கள் அடையலாம்.

ஒருவர் தான் பிறந்த திதியின் அதிதேவதையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி தெரிந்து வைத்திருந்தாலே அவர் வாழ்க்கையில் 50% வெற்றிதான். வளர்பிறை திதிகளுக்கும் தேய்பிறை திதிகளுக்கும் என தனித்தனியாக அதிதேவதைகள் உள்ளனர். எனவே, ஒருவர் தான் வளர்பிறை திதியில் பிறந்திருக்கிறோமா அல்லது தேய்பிறை திதியில் பிறந்திருக்கிறோமா என்பதை முதலில் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒருவர் தன்னுடைய ஜென்ம திதி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த திதியின் அதி தேவதைக்கு மாலை சாற்றி, இரண்டு நெய் தீபம் ஏற்றி வணங்கி வந்தார்களேயானால், அவர் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும். தவிர, ஒவ்வொருவரும் தான் பிறந்த திதியின் கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவதன் மூலம் அவர்களது தலைவிதி மாற்றி அமைக்கப்படுகிறது.

சுக்லபட்சம்/வளர்பிறை திதிகளின் அதிதேவதை,கோயில்கள்

1.பிரதமை

அதிதேவதை - துர்க்கை

கோயில் - பட்டீஸ்வரம் துர்க்கை

2.துவிதியை

அதிதேவதை - விஸ்வதேவன்

கோயில்-திருவைக்காவூர் வில்வவனேஸ்வரர்

3.திருதியை

அதிதேவதை-சந்திரன்

கோயில்-திங்களூர் கைலாசநாதர்/

பெரியநாயகி

4.சதுர்த்தி

அதிதேவதை-விக்னேஸ்வரன்

கோயில்-பிள்ளையார்பட்டி

விநாயகர்

5.பஞ்சமி

அதிதேவதை-தேவேந்திரன்

கோயில்-பெண்ணாடம் பிரளய

காளேஸ்வரர்

6.சஷ்டி

அதிதேவதை-சுப்ரமணியர்

கோயில்-திருச்செந்தூர் முருகன்

7.சப்தமி

அதிதேவதை-சூரியன்

கோயில்-சூரியனார் கோயில்

8.அஷ்டமி

அதிதேவதை-மகாலட்சுமி

கோயில்-தேவூர் வேதபுரீஸ்வரர்

9.நவமி

அதிதேவதை-சரஸ்வதி

கோயில்-கூத்தனூர் சரஸ்வதி

10.தசமி

அதிதேவதை-வீரபத்ரன்

கோயில்-அகோர வீரபத்திரர், மகாமகம் குளம் அருகில்

11.ஏகாதசி

அதிதேவதை-பார்வதி

கோயில்-மதுரை மீனாட்சி

12.துவாதசி

அதிதேவதை-விஷ்ணு

கோயில்-சாரங்கபாணி கும்பகோணம்

13.திரயோதசி

அதிதேவதை-பிரம்மா

கோயில்-திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீசுவரர்

14.சதுர்த்தசி

அதிதேவதை-ருத்ரன்

கோயில்-திருபுவனம் சரபேஸ்வரர்

15.பௌர்ணமி

அதிதேவதை-வருணன்

கோயில்-மகேந்திரப்பள்ளி திருமேனியழகர் வடிவாம்பிகை

கிருஷ்ணபட்சம்/ தேய்பிறை திதிகளின் அதிதேவதை கோயில்கள்

1.பிரதமை

அதிதேவதை - குபேரன்

கோயில் - திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர்

2.துவிதியை

அதிதேவதை - வாயு

கோயில் - ஸ்ரீகாளஹஸ்தி பாதாள விநாயகர்

3.திருதியை

அதிதேவதை - அக்னி

கோயில் - திருவண்ணாமலை

4.சதுர்த்தி

அதிதேவதை - அசுரர்

கோயில் - கஞ்சனூர் கற்பகாம்பாள்

5.பஞ்சமி

அதிதேவதை - தட்சிணாமூர்த்தி

கோயில் - ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்

6.சஷ்டி

அதிதேவதை - அங்காரகன்

கோயில் - வைத்தீஸ்வரன் கோவில்

7.சப்தமி

அதிதேவதை-சித்தர்

கோயில் - திருக்கானூர் கரும்பேஸ்வரர்

8.அஷ்டமி

அதிதேவதை - ஆதிசேஷன் ரங்கநாதர்

கோயில் - கருடாழ்வர் ஸ்ரீரங்கம்

9.நவமி

அதிதேவதை-எமன்

கோயில் - ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதேஸ்வரர்

10.தசமி

அதிதேவதை-குரு

கோயில்-தென்குடித்திட்டைவசிஷ்டேஸ்வரர்

11.ஏகாதசி

அதிதேவதை-சனி

கோயில்-திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர்

12.துவாதசி

அதிதேவதை-விஷ்ணு

கோயில்-திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர்

13.திரயோதசி

அதிதேவதை-நந்தீஸ்வரன்

கோயில்-திருமழபாடி வைத்தியநாத சுவாமி

14.சதுர்த்தசி

அதிதேவதை-மகேஸ்வரன்

கோயில்-கங்கை கொண்ட சோழபுரம்

15.அமாவாசை

அதிதேவதை-சதாசிவன்

கோயில்-இராமேஸ்வரம் இராமநாத சுவாமி

திதியும் நிவேதனமும்

1.பிரதமை -நெய்

2.துவிதியை -சர்க்கரை

3.திருதியை-பால்

4.சதுர்த்தி-பட்சணம்

5.பஞ்சமி-வாழைப்பழம்

6.சஷ்டி-தேன்

7.சப்தமி-வெல்லம்

8.அஷ்டமி-தேங்காய்

9.நவமி-நெற்பொரி

10.தசமி-கருப்பு எள்

11.ஏகாதசி-தயிர்

12.துவாதசி-அவல்

13.திரயோதசி-கடலை

14.சதுர்த்தசி-சத்து மாவு

15.பௌர்ணமி, அமாவாசை-பாயசம்

அந்தந்த திதிக்குரிய நாட்களில் அதற்குரிய நிவேதனத்தை திதிக்குரிய அதிதேவதைக்கு வைத்து வழிபடவும்.