பலவிதமான யோகங்கள் இருந்தாலும், எப்பொழுதும் எல்லோராலும் புகழப்பட்டும் எல்லோரும் விரும்பும் அல்லதுசந்திக்கும் மனிதராக இருப்பவர்கள் சிலர் மட்டுமே. இவரை மட்டும் ஏன் பலர் நாடிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழும். அவ்வாறு எழும் கேள்வி இயல்புதான். அதுபோலவே, சிலர் எப்பொழுதும் தனிமை விரும்பியாகவும், தனிமை இவர்களை ஆட்கொண்ட நபர்களாகவும் இருப்பர். ஆனாலும், அவர்களும் ஆச்சர்யத்திற்குரிய நபராகவே இருப்பார். இந்த மாறுபட்ட இருவருக்கும் பல யோகங்கள் இருக்கும். அப்படி ஆச்சர்யமளிக்கும் ஒரு யோகமே ``துரு துரா யோகம்’’ என்பதாகும்.
துரு துரா யோகம் என்பது என்ன?
துரு என்பது இங்கு துருவங்கள் என்றும் துரா என்பது முன்னும் பின்னும் என்ற பொருளைக் குறிக்கிறது. சந்திரனை மையப்படுத்தி சொல்லப் படும் யோகங்களில் இதுவும் உள்ளது. அனபா - சுனபா என்ற யோகமானது சந்திரனுக்கு முன்னாலும் சந்திரனுக்கு பின்னாலும் உள்ள கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு தனித்தனியாக சொல்லப்படும் யோகமாகும். இந்த துரு துரா யோகமானது இரண்டையும் இணைத்து சந்திரனுக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள யோகத்தைஒருங்கிணைத்து சொல்லப்படும் யோகமாகும். சந்திரனுக்கு சாயா கிரகங்களான ராகு - கேது மற்றும் சூரியன் நீங்கலாக. சந்திரனுக்கு இரண்டாம் (2ம்) இடத்திலும் பன்னிரண்டாம் (12ம்) இடத்திலும் புதன், சுக்ரன், வியாழன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் அமைந்தால், அது துரு துரா யோகமாகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. சுப கிரகங்கள் மட்டும் இருப்பது சிறப்பான அமைப்பாகும். சந்திரன் தனித்து இருக்கக்கூடாது. அவ்வாறு தனித்து இருப்பது ஒரு தோஷமான அமைப்பாகும். அதாவது, தனிமையில் அதிகம் இருப்பார். பொருளை நாடி ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய சூழ்நிலையில் இயங்குவார்.
துரு துரா யோகத்தின் அமைப்புகளின் பலன்கள் என்ன?
பொதுவாக துரு துரா யோகமானது கூட்டத்தையும் பொருளையும் ஈர்க்கும் அமைப்பாகவே இருக்கிறது. சந்திரன் இருக்கும் ராசியின் அடிப்படையிலேயே இந்த பலன்கள் சிறப்பானதாக இருக்கும்.
* ராகு, கேது மற்றும் சூரியன் நீங்கலாக சந்திரனுக்கு இருபுறமும் கிரகங்கள் அமைந்தால் பொன், பொருள் சேர்க்கை உடையவராகவும் சகல சுக போகங்களையும்அனுபவிக்கும் தன்மை உடையவராகவும் இருப்பார்.
* சந்திரனுக்கு இருபுறமும் சனி - சுக்கிரன் இருந்தால் இவர்கள் பெண்கள் மத்தியில் இவர்களின் மனமும் வாழ்வும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கும். பெண்கள் மூலம் தனவரவுகளை உடையவர்களாகவும் அனைத்தையும் அனுபவிக்கும் அமைப்பை உடையவராகவும் இருப்பார்.
* சந்திரனுக்கு இருபுறமும் செவ்வாய் - புதன் இருக்கப் பெற்றவர்கள். தொழில்நுட்பம் தொடர்பான சிந்தனைகளை சிந்தித்துக் கொண்டே இருப்பர். நிலம் வாங்கி விற்பது; ரியல் எஸ்டேட் மற்றும் வீடு வாடகை தொடர்பான கமிஷன் தொடர்பான தொழில்களை செய்து கொண்டே இருப்பார்.
* சந்திரனுக்கு இருபுறமும் செவ்வாய் - வியாழன் இருக்கப் பெற்றவர்களுக்கு நிலம் தொடர்பான விஷயங்களில் எதிரிகள் இருப்பர். எப்பொழுதும் சுய முயற்சியினால் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிப்பர். சிலருக்கு சிலை வடிப்பதிலும் சிலை விற்பனை செய்வதிலும் நல்ல பொருள் ஈட்டும் யோகம் உண்டாகும். சிலரின்
சிந்தனை மரங்களை பற்றியும் விவசாயத்தில் என்னென்ன பொருட்களை எப்படி விளைவிக்கலாம் என்றும் ஒரு இலையை பார்த்தவுடன் இது இந்த வகையான மரம் என்றும் செடி என்றும் சொல்லக்கூடிய திறமையைப் பெற்றிருப்பார்.
* சந்திரனுக்கு இருபுறமும் அதாவது, இரண்டாம் (2ம்), பன்னிரெண்டாம் (12ம்) பாவகத்திலும் செவ்வாய் - சனி இருக்கப்ப பெற்றவர்கள், எப்பொழுதும் பிரச்னைகள் இவர்களை நோக்கியே பயணப்படும். இவர்கள் காவல்துறை உடனோ அல்லது வீர தீர சூரர்களுடன் தொடர்பு கொண்டிருப்பர்.
* சந்திரனுக்கு இருபுறமும் வியாழன், சுக்ரன், புதன் தொடர்பிருந்தால் இவர்கள் படிப்பில் ெகட்டிக்காரர் களாக இருப்பர். எப்ெபாழுதும்
படிப்பில்தான் இவர்கள் கவனம் இருக்கும். மிகவும் பண்புள்ளவராகவும் அறிவார்ந்த சிந்தனை உடையவராகவும் இருப்பார். அசுப விஷயங்களை இவர் சிந்திக்க மாட்டார்.
* சந்திரனுக்கு இருபுறமும் புதன் - சுக்ரன் இருக்கப் பெறின் அவர் இசை தொடர்பான சிந்தனை உடையவர்களாகவும் இசையை முறையாக கற்றுத் தேர்வதில் ஆர்வம் உடையவராகவும் இருப்பர். இதில் ஏதேனும் கிரகங்கள் பலம் பெற்றிருந்தால், அதற்கானதிறமையை பெற்றிருப்பர்.
* சந்திரனுக்கு இருபுறமும் சனி மற்றும் வியாழன் இருக்கப் பெற்றவர்கள், எதையும் கேள்வி கேட்டு லாஜிக் இல்லாமல் செய்யமாட்டார்கள். கோயிலுக்கு செல்வதில் விருப்பமற்றவர்களாக இருப்பர். அப்படியே சென்றாலும் குறைகளை காண்பதிலும் கோயிலில் அப்படி என்ன இருக்கிறது என ஆய்வு செய்வதிலும் நாட்டம் உடையவர்களாகஇருப்பார்.
* சந்திரனுக்கு இருபுறம் சனி - சூரியன் இருக்கப் பெற்றவர்கள் அரசாங்கத் தொடர்பு உடையவர்களாக இருப்பர். மேலும், அரசியலில் நாட்டம் உடையவர்களாகவும் அரசியல்பற்றிய சிந்தனை உடையவர்களாகவும் இருப்பர். இவர்கள் உணவு விஷயத்தில் கவனம் உடையவராக இருக்க வேண்டும். காரணம், இவர்களுக்கு பல் தொடர்பான நோய்கள் உண்டாக வாய்ப்புகள் அதிகம்.
* பொதுவாகவே சந்திரனுக்கு அருகில் சனி - புதன் இணையப் பெற்றவர்கள் சட்டம் போன்ற துறைகளில் நுட்பம் அறிந்தவர்களாகவும், சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் இருப்பர். இவர்கள் இருக்கும் இடம் கூட்டம் உள்ள இடமாக இருக்கும். எப்பொழுதும் கூட்டம் கூடும் இடங்களில் இவர்களுக்குஉத்யோகம் சிறப்பானதாக இருக்கும்.
* இது போலவே சந்திரனுக்கு முன் பின் கிரகங்கள் இருக்கப் பெற்றவர் களின் பலன்கள் மாறுபட்டதாகவே இருக்கும். ஆனால், இவர்கள் தனித்து இருக்க மாட்டார்கள்.
ஜோதிட ஆய்வாளர்சிவகணேசன்