Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆதிக்கம் காட்டும் தனுசு ராசி

தனுசு ராசி ஆதிக்க ராசி, அதிகாரமோகம் கொண்ட ராசி, அறிவில் தெளிவு கொண்ட ராசி, அறிவுத் தாகம் கொண்ட ராசி என்று நல்லதும் கெட்டதுமாக சொல்லிக் கொண்டே போகலாம்

குருத்துவம்

தனுசு நெருப்பு ராசிகளில் ஒன்று. குருவின் ராசியாகும். எனவே இவர்களுக்கு அறிவின் மீதான தாகம் அதிகம். இவர்கள் குருத்துவம் பிடித்தவர்கள். அதாவது தானே குரு, தான் சொல்வதே சரி, தன் கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள்தான் அறிவு தாகம் உடையவர்கள், என்று நம்புவர். இவர்களிடம் குரு பக்தி, கடவுள் பக்தி, பெரியோர் சொல் கேட்டல் போன்ற உயர்பண்புகள் இருக்கும்.

வினைத்திட்பம்

தனுசு ராசியினர் உடல் பலம் வாய்ந்தவர்கள் கிடையாது. பார்க்க நோஞ்சானாக இருப்பார்கள். ஆனால் அறிவில் பலம் வாய்ந்தவர்கள். யாரையும் தன் அறிவினால் அடித்து காலி செய்ய முடியும் என்ற ஓவர் கான்ஃபிடன்ஸ் கொண்டவர்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட எந்த செயலையும் சவாலாக ஏற்று வெற்றிகரமாக செய்து முடிக்கும் வினைத்திட்பம் உடையவர்கள். திட்டமிடுதல் மற்றும் வேலை வாங்குவதில் கெட்டிக்காரர்கள். தனுசு ராசியினருக்கு எந்தக் கஷ்டம் வந்தாலும், பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள். விஸ்வாசமும்,நேர்மையும், மன உறுதியும், அன்பும், கலகலப்பான பேச்சும், நகைச் சுவை உணர்வும் கொண்டவர்கள். தனுசு ராசியினரின் ஞானச் செருக்கையும் குருத்துவ குணத்தையும் மேனேஜ் பண்ண கூடியவர்கள் கும்பராசியினர் ஆவர். கும்பராசியில் தாய், தந்தை, கணவர், மனைவி அமைந்தால் இவர்கள் பாக்கியசாலிகள்.

தவறை நியாயப்படுத்துவோர்

தனுசு ராசிக்காரர்கள் தங்களை உத்தமர் என்று காட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில், சில பொய்களைச் சொல்ல தயங்க மாட்டார்கள். எந்தத்தருணத்திலும் தன்னைப் பொல்லாதவன் என்று யாரும் கருதுவதை இவர்கள் விரும்புவதோ ஏற்றுக் கொள்வதோ கிடையாது. ஏதோ சமய சந்தர்ப்பம் சரியில்லாமல் ஒரு தவறு செய்ய நேர்ந்துவிட்டது என்று போகிற போக்கில் இவர்கள் தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்துவார்கள். தனுசு ராசியினர் குதிரையைப் போன்ற வேகமான செயல்பாடு உடையவர்கள். பசி, தாகம் அறியாமல் வேலை செய்கின்றவர்கள். பூமிக்கும் கடவுளுக்கும் பாலமாக விளங்குகின்றவர்கள். இவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கக் கூடியவர்கள் மற்ற நெருப்பு ராசிக்காரர்கள் ஆன மேஷமும், சிம்மமும் ஆகும்.

எந்த கட்டுப்பாடும் கிடையாது

தனுசு ராசிக்காரருக்கு நேரம் காலம் என்ற கட்டுப்பாடு இடம் பொருள் ஏவல் என்ற பேதங்கள் கிடையாது. எந்த நேரத்திலும் எந்த வேலையையும் எளிதாகச் (effortless) செய்து முடிப்பார்கள். எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையாவது சொல்லிவிட்டுதான் சொன்னதே சரிதான், பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடுவார்கள். இவர்களுக்கு உடல் வலிமை கிடையாது என்பதனால் கை நீட்டும் பழக்கம் இருக்காது. வாய்ச்சவடால் பேசுவதும் கிடையாது. அதனால் உள்ளுக்குள்ளேயே வன்மம் வைத்து செயல்படுவார்கள். அழகும் வசீகரமும் அழகான தோற்றமும் வசீகரமான பேச்சும் கொண்ட தனுசு ராசியினர், முதல் பார்வையில் யாரையும் கவர்ந்துவிடுவர். பல துறை அறிவை பெற்றவர் என்பதால், இவரை பார்த்தவுடன் இவருக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்றுதான் நினைக்கத் தோன்றும். காரணம், தங்களுக்கு தெரியாத விஷயங்கள் பற்றி மற்றவர் பேசும்போதுகூட அவற்றில் 99 சதவீதம் தெரியாவிட்டாலும், தெரிந்த ஒரு சதவீதத்தை விரிவாகப் பேசி மீதி 99% தனக்கு நன்றாகத் தெரியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடுவர். இவர்களின் பேச்சில் வசீகரமும் வாதத் திறமையும் இருக்கும்.

கனவு காணும் வாழ்க்கை

தனுசு ராசி பெண், கிட்டத்தட்டசந்திரமுகி கங்கா போல் சரித்திர காலத்தில் வாழ்வாள். தனுசு ராசி ஆண் பெண் எவராக இருந்தாலும், இவர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்களோ, வானத்திலிருந்து தேவகுமாரன் வருவான் அல்லது பர்வத ராஜகுமாரி வருவாள் என்று ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே காலத்தை கடத்தி விடுவார்கள். காலம் கடந்த திருமணம். ஆரம்ப மணமுறிவு இந்த ராசியினருக்கு நடக்கும். இவர்கள் பழங்காலத்தில் கற்பனையில் வசிப்பவர்கள். யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள மறுப்பர். லட்சியவாதிகள்.

திருமண வாழ்க்கை

தனுசு ராசியினர் வாழ்வின் பல காதல், பல திருமணத்துக்கு வாய்ப்பில்லை. இவர்கள் அடக்கியும் அடங்கியும் போவதில் வல்லவர்கள். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கௌரவம் பேசுவார். இவர்களிடம் காதல் திருமணத்துக்கு வாய்ப்பு குறைவு.

ஆண்களின் பெருமைப் பேச்சு

தனுசு ராசி ஆண்கள் சிலர், ஆபத்தான செயல்களைச் செய்ய முன்வருவர். ஓர் இரு முறை அதைச் செய்து காட்டி விட்டுப் பின்பு வாழ்நாள் முழுக்க அதைப் பற்றிப் பேசியே கைதட்டல் வாங்கி விடுவார்கள். பெண்களும் அப்படித்தான்.

பாராட்டுக்கு ஏமாறுவர் தனுசு ராசியினர்

பழகுவதற்கு இனியவர்கள். பண்பாளர்கள். எல்லை மீறி பேசவோ செயல்படவோ மாட்டார்கள். மற்றவர்களையும் கண்ணியமான தொலைவில் வைத்திருப்பார்கள்.

ஆனால் இந்த உலகமே விடிந்ததிலிருந்து பொழுது அடையும் வரை தன்னைப் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்கள் மனதிற்குள் ஆழமாகக் குடியிருக்கும்.

அன்புக்கு உடைமை தனுசு ராசியினர்

சகோதரர், கணவன், மனைவி, நண்பர் என்று எந்த நிலையிலும், தான் மட்டுமே அன்பு செலுத்த வேண்டும் மற்றவர்கள் அன்பு செலுத்தி விடக்கூடாது என்று `பொசசிவ்’ சிந்தனை உடையவர்கள். இதன் விளைவால் இவர்கள் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும். தாய் தந்தையரிடம்கூட இவர்கள் தன் உடன் பிறப்புகளை நெருங்க விடுவதில்லை. எல்லாம் நான் கேட்டு சொல்கிறேன் என்று அவர்களை விரட்டி விடுவார்கள்.

சர்ப்ரைஸ்

லவ்வர்ஸ் தனுசு ராசியினருக்கு சர்ப்ரைஸ்கள் மிகவும் பிடிக்கும். திடீரென ஒரு வாழ்த்து அனுப்புவது, நேரில் வந்து பரிசு கொடுப்பது, எல்லோரிடமும் சிரிக்க சிரிக்க பேசும் இவர்கள் எப்போதும் தன் சுயத்தை, தன் சுயமரியாதையை இழப்பதில்லை. தன் கண்ணியத்தைக் காப்பாற்றுவதில் முதலிடத்தில் இருப்பார்கள்.