Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராசிகளின் உபாசனை தெய்வங்கள்

உங்களுடைய உபாசனை தெய்வத்தை வழிபட்டு வர வாழ்வில் தோல்வி என்பதே இல்லை என்பது சித்தர்களின் வாக்கு. இதைக் கண்டறிய ஆண் ஜாதகத்தில் குரு நின்ற வீட்டிலிருந்து 11 ஆம் வீடு. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற வீட்டிலிருந்து 11 ஆம் வீடு. என்ன ராசியாக வருகிறதோ அந்த ராசிக்குரிய கீழ்க்கண்ட தெய்வம் மற்றும் கோயிலுக்கு சென்று வழிபட வெற்றிமேல் வெற்றி மற்றும் சகல விதமான சம்பத்தும் கிட்டும்.

*மேஷம் - ஸ்ரீ மகாலட்சுமி, பெரியகலையம்புத்தூர், பழனி.

*ரிஷபம் - பர்வதவர்த்தினி, இராமேஸ்வரம்.

*மிதுனம் - காந்திமதி அம்மன், நெல்லை.

*கடகம்- பாலா திரிபுரசுந்தரி, நெமிலி.

*சிம்மம்- லலிதாம்பிகை, திருமீயச்சூர்

*கன்னி - ஸ்ரீ துர்க்கை, பட்டீஸ்வரம்

*துலாம் - ஸ்ரீரங்கம் அருகே காட்டழகிய சிங்கப்பெருமாள்.

*விருச்சிகம் - அலர்மேல்மங்கை, திருப்பதி.

*தனுசு - ஸ்ரீ வராகி, தஞ்சாவூர்.

*மகரம் - ஸ்ரீ ராஜகாளியம்மன் தெத்துப்பட்டி, ஒட்டன்சத்திரம்

*கும்பம் - குற்றாலீஸ்வரர், குற்றாலம்

*மீனம் - மதுரை மீனாட்சி.

ஆண் ஜாதகத்தில் மேஷத்தில் குரு நின்றால் உபாசனை தெய்வம் குற்றாலம் குற்றாலீசுவரர்.

பெண் ஜாதகத்தில் மேஷத்தில் சுக்கிரன் என்றால் உபாசனை தெய்வம் குற்றாலம் குற்றாலீஸ்வரர்.

ஆண் ஜாதகத்தில் ரிஷபத்தில் குரு நின்றால் உபாசனை தெய்வம் மதுரை மீனாட்சி.

பெண் ஜாதகத்தில் ரிஷபத்தில் சுக்கிரன் நின்றால் உபாசனை தெய்வம் மதுரை மீனாட்சி.

ஆண் ஜாதகத்தில் மிதுனத்தில் குரு நின்றால் உபாசனை தெய்வம் பழனி திருஆவினன்குடி, பெரியகலையம்புத்தூர், ஸ்ரீ மகாலட்சுமி.

பெண் ஜாதகத்தில் மிதுனத்தில் சுக்கிரன் என்றால் உபாசனை தெய்வம் பழனி திருஆவினன்குடி, பெரியகலையம்புத்தூர் ஸ்ரீ மகாலட்சுமி.

ஆண் ஜாதகத்தில் கடகத்தில் குரு நின்றால் உபாசனை தெய்வம் பர்வதவர்த்தினி ராமேஸ்வரம்.

பெண் ஜாதகத்தில் கடகத்தில் சுக்கிரன் என்றால் உபாசனை தெய்வம் பர்வதவர்த்தினி ராமேஸ்வரம்.

ஆண் ஜாதகத்தில் சிம்மத்தில் குரு நின்றால் உபாசனை தெய்வம் காந்திமதி அம்மன் திருநெல்வேலி.

பெண் ஜாதகத்தில் சிம்மத்தில் சுக்கிரன் என்றால் உபாசனை தெய்வம் காந்திமதி அம்மன், திருநெல்வேலி.

ஆண் ஜாதகத்தில் கன்னியில் குரு நின்றால் உபாசனை தெய்வம் பாலா திரிபுரசுந்தரி நெமிலி.

பெண் ஜாதகத்தில் கன்னியில் சுக்கிரன் என்றால் உபாசனை தெய்வம் பாலா திரிபுரசுந்தரி நெமிலி.

ஆண் ஜாதகத்தில் துலாமில் குரு நின்றால் உபாசனை தெய்வம் லலிதாம்பிகை திருமீயச்சூர்.

பெண் ஜாதகத்தில் துலாமில் சுக்கிரன் நின்றால் உபாசனை தெய்வம் லலிதாம்பிகை திருமீயச்சூர்.

ஆண் ஜாதகத்தில் விருச்சிகத்தில் குரு நின்றால் உபாசனை தெய்வம் ஸ்ரீ துர்க்கை பட்டீஸ்வரம்.

பெண் ஜாதகத்தில் விருச்சிகத்தில் சுக்கிரன் நின்றால் உபாசனை தெய்வம் ஸ்ரீ துர்க்கை பட்டீஸ்வரம்.

ஆண் ஜாதகத்தில் தனுசு ராசியில் குரு இருந்தால் உபாசனை தெய்வம் ஸ்ரீரங்கம் அருகே காட்டழகிய சிங்கப் பெருமாள்.

பெண் ஜாதகத்தில் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் உபாசனை தெய்வம் ஸ்ரீரங்கம் அருகே காட்டழகிய சிங்கப்பெருமாள்.

ஆண் ஜாதகத்தில் மகர ராசியில் குரு இருந்தால் உபாசனை தெய்வம் அலர்மேல்மங்கை, திருப்பதி.

பெண் ஜாதகத்தில் மகர ராசியில் சுக்கிரன் இருந்தால் உபாசனை தெய்வம் அலமேல்மங்கை, திருப்பதி.

ஆண் ஜாதகத்தில் கும்பத்தில் குரு இருந்தால் உபாசனை தெய்வம் ஸ்ரீ வராகி தஞ்சாவூர்.

பெண் ஜாதகத்தில் கும்பத்தில் சுக்கிரன் இருந்தால் உபாசனை தெய்வம் ஸ்ரீ வராகி தஞ்சாவூர்.

ஆண் ஜாதகத்தில் மீனத்தில் குரு இருந்தால் உபாசனை தெய்வம் ஸ்ரீ ராஜகாளியம்மன் தெத்துப்பட்டி, ஒட்டன் சத்திரம்.

பெண் ஜாதகத்தில் மீனத்தில் சுக்கிரன் இருந்தால் உபாசனை தெய்வம் ஸ்ரீ ராஜகாளியம்மன் தெத்துப்பட்டி ஒட்டன்சத்திரம்.

அவரவர் உபாசனை தெய்வத்தை நேரடியாக அந்த ஸ்தலத்திற்கு சென்று வணங்கி வந்தால் பரிபூரண பலன் கிட்டும்.