Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சனி தோஷம் விலக, நல்லருள் புரிவார் சித்ர குப்தன்

கோயில் இறைவனின் இல்லமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட அந்த இறை இல்லத்திற்குள் நாம் நுழையும் மனிதர்களின் தோஷங்களும் பாவங்களும் நிர்முலமாகின்றன என்பது நம் கண்ணால் காண முடியாத உண்மை. ஆம், அப்படிப்பட்ட இறை இல்லங்களை கால நேர வர்த்தமானத்தின்படி ஒருவர் பிரவேசித்து வேண்டினால், அவர்கள் எண்ணங்கள் நிறைவேறும் என்பது சூட்சுமமாக உள்ளது. இதை அறிந்து கொள்வதற்கோ, புரிந்து கொள்வதற்கோ நமக்குள் அனுபவம் தேவை. அப்படி பிரவேசிக்கும் சமயத்தில் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் நிவர்த்தி ஆகின்றன. கோள்களுடன் கோயில்களை எவ்வாறு உணர்வது என்பது ஒரு பெரிய ஆராய்ச்சி. அவ்வாறே, காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் கோயிலுக்கு சென்றால் என்ன பலன்கள் என்பதை அறிவோம்.

இக்கோயில் 9ம் நூற்றாண்டி இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டது. சிவபெருமான் - பார்வதி தேவியால் பூமியில் உள்ள தர்மத்தையும் புண்ணிய கணக்கையும் வைப்பதற்கு எமதர்மனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவன் வரைந்த ஓவியத்தில் உயிர் பெற்றவர் சித்திரகுப்தன். இவர் பாவ - புண்ணிய கணக்குகளை எமதர்மனிடம் ஒப்படைக்கும் தேவதையாக உள்ளார். சித்திரை மாதத்தில் பிறந்த புத்திரன். இவர் காமதேனுவின் வயிற்றில் உதித்தார். ஆகையால், பசும்பால் கொண்டு அபிஷேகம் கூடாது. எருமை பாலால் செய்யப்பட்ட பொருட்களை அபிஷேகத்திற்கு வழங்குவது நன்மையாகும். 1911ம் ஆண்டு, இக்கோயிலை புனரமைப்பு செய்யும் பொழுது சித்திரகுப்தர் அவர் மனைவி கரணிகாம்பாள் விக்ரகம் கண்டெடுக்கப்பட்டது. இந்த விக்ரகத்தைதான் இப்பொழுது உள்ளே உள்ள கருவறையில் வைத்துள்னர்.

ஜோதிடத்தின் அடிப்படையில் இக்கோயில் தலத்திற்கு உள்ள சித்ரகுப்தருக்கு, நாமகரணம் செய்யும் கிரகங்கள் செவ்வாய் மற்றும் சனி. இங்கு சித்ரா என்பதற்கு செவ்வாய் கிரகமாகவும், குப்தன் என்பதற்கு ரகசியம் என்ற பொருள் வருகிறது. ஆகவே, சனி என்னும் கிரகம் காரகமாக வருகிறது. யாருக்கும் பாரபட்சம் என்பதனை பார்க்காமல் தர்மத்தின் அடிப்படையில் உயிர்களின் ஜீவ கணக்குகளை காப்பவனாக சித்ரகுப்தன் உள்ளார். விருச்சிகத்தில் செவ்வாய் - சனி தொடர்புள்ளவர்கள் இக்கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அங்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், சுபிட்சங்கள் உருவாகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும் கட்டிடத்துறையில் உள்ளவர்களுக்கும் மேன்மேலும் அருள்பெற்று வாய்ப்புகளை உருவாக்கும். பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானத்தில் சனி இருந்தால், திருமணம் தடைப்படும் அமைப்பு உண்டாகும். ஆகவே, இங்கு வந்து நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணப் பிராப்தி உண்டாகும். ஏழரைச் சனி நடப்பவர்களுக்கு, இக்கோயிலுக்கு சென்று வணங்கி வந்தால் சனி தோஷம் விலக, நல்லருள் புரிவார் சித்ர குப்தன். பௌர்ணமி அன்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவப்பு கலர் வஸ்திரம் கொடுத்து, வழிபாடு செய்தால் வழக்கு மற்றும் நீதிமன்றம் ெதாடர்பான பிரச்னைகள் தீர்வாகும். ஒவ்வொரு பௌர்ணமியும் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.