கிரகங்களே தெய்வங்களாக
கிரகங்களே தெய்வங்களாகவும் அதற்கு பெயர்கள் நாமகரணம் தந்து கிரகங்களுக்கான பரிகாரங்களையும் தெய்வங்களே அருகில் அருள்புரிகின்றன. இவ்வாறு, ஒவ்வொரு திருத்தலங்களும் இவ்வாறு பல விஷயங்களை அருள்புரிகின்றன. என்பதே சிறப்பான விஷயமாக உள்ளன.
பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த இறைவனை பூஜித்து வந்த சிவாச்சாரியாருக்கு இரண்டு பெண்கள். இருவரும் பார்ப்பதற்கு ஒன்றாகவே இருப்பர். இதில் மூத்த பெண் சுசீலையை அரசப்புலவரின் மகன் மணந்தான். இவன் தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களை தரிசித்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தபோது சுசீலை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இல்லாமல் உருக்குலைந்து காணப்பட்டாள்.
இவளது தங்கை அழகுடன் இருந்ததால் அவளை மனைவியாக நினைத்து அழைத்தார். அருகிலிருந்த சுசீலையை தன் மனைவியாக ஏற்க மறுத்தார். இதனால் மனம் வருந்திய சிவாச்சாரியார் இத்தல இறைவனிடம் அழுது முறையிட்டார். இறைவன் சுசீலையை கோயில் எதிரிலுள்ள தீர்த்தத்தில் தை அமாவாசை தினத்தில் நீராடும்படி கூறினார். நீராடி வெளியே வந்தவுடன் சுசீலை முன்பை விட மிக அழகாக விளங்கினாள். சிவன், பார்வதி சமேதராக காட்சி தந்து அவள்தான் இவள் என சுட்டிக்காட்டி மறைந்தார். அன்றிலிருந்து இத்தலம் அவளிவணல்லூர் எனவும் இறைவன் சாட்சிநாதர் எனவும் ஆனார்கள்.
இங்குள்ள தெய்வத்திற்கு சூரியன், குரு, சுக்ரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.
*அனுஷம் நட்சத்திர நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தீராத சருமப் பிணிகள் தீரும் என்பது ஐதீகம்.
*பரணி நட்சத்திரம் அல்லது பூராடம் நட்சத்திர நாளில் சந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டி தினையை நைவேத்தியம் கொடுத்தால் எப்பேர்பட்ட கண் பிரச்னைகளும் ஒரு கண் பார்வை பிரச்னையாக இருந்தாலும் விரைவாக குணமடையும்.
*புனர்பூசம் நட்சத்திர நாளில் இக்கோயிலின் தலவிருட்சமான பாதிரி மரத்திற்கு மாமரத்தில் செய்யப்பட்ட சிறிய தொட்டில் செய்து வெண்பட்டு அல்லது மஞ்சள் பட்டுநூலால் இம்மரத்தில் கட்டி பின்பு பார்லி அரிசியில் சுவாமிக்கு நைவேத்தியம் தொடர்ந்து மூன்று மாதம் செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.
*கர்ப்பிணி பெண்களும் சுவாமிக்கு பார்லி அரிசி நைவேத்தியம் பிரசாதத்தை சாப்பிட்டுவந்தால் சுகப்பிரசவம் உண்டாகி நல்ல படியாக குழந்தை பிறக்கும்.
*இத்திருத்தலத்தில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் கணவன் - மனைவி பிரச்னை தீரும். கணவன் - மனைவி ஒன்றுபட்டு வாழ்வர்.
*பௌர்ணமி நாளில் மஹா வில்வச் செடியை இக்கோயிலில் நட்டு அதனைப் பாதுகாப்பாக வளர்த்தால் வில்வம் வளர வளர உங்களின் கர்மா குறைந்து வாழ்வில் சுபகாரியங்கள் உண்டாகும்.
எப்படிச் செல்வது? தஞ்சாவூரிலிருந்து (26 கி.மீ) திருவாரூர் செல்லும் வழியில் அம்மாபேட்டையில் இறங்கி வடக்கே 6 கி.மீ தூரத்தில் அவளிவணல்லூர் உள்ளது.