Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லால்கிதாப் எனும் ஜோதிட சாஸ்திரம்

வட இந்தியாவில் ஜோதிடம் மற்றும் பரிகாரம் தொடர்பான புத்தகமாக ``லால் கிதாப்’’ என்ற சிவப்பு புத்தகம், புகழ் பெற்றதாக உள்ளது. இந்த புத்தகம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பண்டிட் ரூப் சந்த் ஜோஷி என்பவரால் வெளியிடப்பட்டது. வட இந்தியாவில் அதிகமாக விற்கப்பட்ட புத்தகம் லால்கிதாப் என்றால் அது மிகையில்லை. இந்த புத்தகம் உருது மற்றும் பஞ்சாப் மொழியை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. சில இடங்களில் பாடல் வடிவிலும் இருக்கிறது. இந்த புத்தத்தை தழுவியே பல ேஜாதிடர்களும் பின்பற்றி, அந்த பரிகாரங்கள் யாவும் வெற்றிகரமாக உள்ளது என்று பலர் கூறுகின்றனர். பின்னாளில் இந்த புத்தகம் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.

பண்டிட் ரூப் சந்த் ஜோஷி

பண்டிட் ரூப் சந்த் ஜோஷி, 1898-ல் பஞ்சாப்பில் பிறந்துள்ளார். இவர் சிறுவயதிலேயே தனது தாயை இழந்து பல துன்பங்களுடன் வளர்ந்தார். இவருக்கு பசுவின் முகத்தை உற்று நோக்கி அதன் அம்சத்தை வைத்தே அந்த பசுவின்எஜமானரைப் பற்றிய கணிப்புகளை சொல்லும் திறமை பிறவியிலேயே இருந்தது. மக்களுக்கு சேவை செய்வதையே தனது வாழ்நாள் பணியாக கொண்டிருந்தார்.

தன்னுடைய இறுதி காலத்தில் ஒரு ஊடக நிபுணரின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அடுத்தமுறை வரும்போது இன்னும் என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு மறுத்த அவர், இடைமறித்து அடுத்த முறை நாம் சந்தித்துக் கொள்ள வாய்ப்பிருக்காது. ஆம், அவர் இறப்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தார்.

லால் கிதாப் புத்தகத்தில் கிரகங்களுக்கான பரிகாரங்கள்

சூரியன் பாதிக்கப்பட்டிருந்தால், ஓடும் நீரில் செப்பு நாணயத்தை வீசுவது. வீடு கட்டும்ேபாது நுழைவாயிலை கிழக்கில் வைப்பது சாதகமாக இருக்கும்.

சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால், திங்கட்கிழமை விரதம். பால், அரிசியை தானம் செய்தல். படுக்கையின் பாதங்களில் வெள்ளி நகைகளை வைப்பது.

செவ்வாய் பாதிக்கப்பட்டிருந்தால், செவ்வாய்க் கிழமை விரதமிருத்தல். சிந்தூர் என்ற குங்குமத்தை தானம் செய்தல் அல்லது ஓடும் நீரில் சிந்தூரை

வீசுவது.

புதன் பாதிக்கப்பட்டிருந்தால், புதன் கிழமை விரதம் மேற்கொள்ளுதல். பச்சை நிற பொருட்களை ஓடும் நீரில் விடுதல். பச்சை நிற ஆடைகளை அல்லது பச்சை நிற வளையல்களை தானம் செய்தல் வேண்டும்.

வியாழன் பாதிக்கப்பட்டிருந்தால், மரத்திற்கு நீர் பாய்ச்சுதல். மஞ்சள் நிற பூச்செடிகளை நட்டு வளர்த்தல்.

சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால், சலவை செய்த ஆடைகளை அணிவது. வாசனை திரவியங்களை பயன்படுத்துவது. வெள்ளிக் கிழமை விரதம் மேற்கொள்வது. வழிபாட்டு தலங்களுக்கு தயிர், தூய பசு நெய், கற்பூரம் தானம் கொடுத்தல் ஆகும்.

சனி பாதிக்கப்பட்டிருந்தால், சனிக்கிழமை விரதம் மேற்கொள்ளுதல், சனிக்கிழமை எண்ணெய் தானம் செய்யலாம். நாய் மற்றும் காகங்களுக்கு கடுகு எண்ணெய் ரொட்டியை கொடுப்பதும் நல்ல பரிகாரம். பைரவரை வழிபாடு செய்தல்.

ராகு பாதிக்கப்பட்டிருந்தால், நோய் ஏற்பட்டிருந்தால், நோயாளியின் எடைக்கு சமமான பார்லி அல்லது கோதுமையை ஓடும் நீரில் விடலாம். துப்புரவு தொழில் செய்வோருக்கு சிவப்பு மசூர் பருப்பு வழங்குதல்.

கேது பாதிக்கப்பட்டிருந்தால், விநாயகர் வழிபாடு. வீட்டில் வெள்ளை மற்றும் கருப்பு நாயை வளர்ப்பது அல்லது அந்த நாய்க்கு உணவளிப்பது.

லால் கிதாப் புத்தகத்தில் சொல்லப்பட்ட பரிகாரங்கள் யாவும் தோஷமுடைய கிரகங்களை அடையாளம் கண்டு, அவற்றின் தீங்கு விளைவிக்கும் பலன்களை குறைப்பதே ஆகும்.