Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்பல், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

படைப்புத் தொழில் செய்யும் பிரம்மாவுக்கு நானே சிறந்தவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இந்த கர்வத்தின் காரணமாக சிவபெருமானின் சாபத்திற்கு உட்பட்டு, தான் படைக்கும் சக்தியை இழந்தார் பிரம்மா. இவர் பல சிவதலங்களில் வழிபட்டும் சாபவிமோச்சனம் கிடைக்கவில்லை. இறுதியாக இவர், அம்பல் தலத்தில் அன்ன வடிவம் கொண்டு அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டார். அதன்பயனாக, தனது சாபம் நீங்கி படைப்புத் தொழிலை பெற்றார். பிரம்மா வழிபட்ட சிவன் என்பதால், இத்தலத்திற்கு பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.

தேவர்களின் தலைவனான இந்திரன் கௌதம முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். முனிவர் அப்பொழுது அங்கு இல்லை. முனிவரின் ரூபத்தில், கௌதம முனிவரின் மனைவியான அகலிகையை அணுகினான். அகலிகை தனது கணவர் என நினைத்து மயங்கிப் போனாள். இதனை தனது ஞானத் திருஷ்டியால் அறிந்த கௌதம முனிவர், இந்திரனுக்கு உடல் முழுவதும் குறிகள் தோன்றும்படி சாபம் இட்டார். இதனால் அவமானம் அடைந்த இந்திரன், பல ஸ்தலங்களில வழிபட்டும் சாபவிமோசனம் கிட்டவில்லை. இறுதியாக, அம்பல் தலத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரரை வழிபட்டு தவமிருந்து சிவபெருமான் இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த திருத்தலம் இது விஸ்வாமித்திர முனிவரின் தவத்தை கலைக்க முயன்றதால், காமதேவனுக்கு சாபம் ஏற்பட்டது. அதனால், அம்புகளின் வலிமை குறைந்து. அந்த சாபத்தில் விடுபட காமதேவன் இங்கு வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. கௌதம முனிவர் இத்தலத்தில் தவம் செய்து இறைவனை வேண்டினர். இவரது தவத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமானிடம் நான் உடலை விட்ட பின் என்னை யாரும் பார்க்கக்கூடாது. என்னை இத்தலத்தில் விருட்சமாக இருக்க அருள்புரிய வேண்டும் என்றார். அதன்படியே இறைவன் அருள் புரிந்தார். இங்கு அமாவாசை நாட்களில் கௌதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தல விருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்யப்படுகிறது. இங்குள்ள பிரம்மபுரீஸ்வரருக்கு வியாழன், சூரியன், சனி, புதன் நாமகரணம் செய்துள்ளது.

* அமாவாசை நாளில் ஸ்தல விருட்சமான புன்னை மரத்திற்கு பால் ஊற்றி வழிபட்டு மஞ்சள் பட்டு நூலை மரத்தில் கட்டி வழிபட்டால் பில்லி, சூன்யக் கோளாறுகள் விலகும்.

* பௌர்ணமி நாளில் புன்னை மரத்திற்கு பட்டு நூலில் தொட்டில் கட்டி வழிபட்டு சுவாமிக்கு மாம்பழ அபிஷேகம் அல்லது மாம்பழ நெய்வேத்தியம் செய்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.

* செவ்வாய் 2, 8, 12ம் பாவகத்தில் இருந்தால் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் வெல்லம், எள்ளால் செய்யப்பட்ட இனிப்புகளை அனுஷம் அல்லது கிருத்திகை நட்சத்திர நாளில் நெய்வேத்தியம் செய்து வழிபட்டால் செவ்வாய் தோஷ தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடைபெறும்.

* அரிசியில் பால் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் அல்லது நெய்வேத்தியம் செய்தால் ஐஸ்வர்யம் கைகூடும்.

* அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் கடுகு எண்ணெயில் தீபம் ஏற்றி வணங்கினால் சத்ருக்கள் தொல்லை நீங்கும்.

*ஐந்தாம் பாவகத்தில் ராகு இருப்பதால் புத்திர பாக்யத்தில் தடைகள் உண்டாகும். திருவாதிரை நட்சத்திர நாளில் படுக்கையின் தலையணையில் முள்ளங்கி வைத்து உறங்கி, மறுநாள் காலையில் கோயிலில் உள்ள பசுவிற்கு கொடுத்தால் ராகு தோஷம் குறைந்து புத்திர பாக்கியம் உண்டாகும்.

*மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பேரளம் என்ற ஊரிலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. அம்பர் மாகாளம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மேற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது.