முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த முக்கியமான அமாவாசை தினங்களில் ஒன்று ஆடி அமாவாசை. இந்த நாளில் நதி மற்றும் சமுத்திரக் கரைகளுக்குச் சென்று செய்யும் முன்னோர் வழிபாடு நடத்துவது மிகவும் பயன் கொடுக்கும். ஆடி அமாவாசை வழிபாட்டால் திருமணம், குழந்தைப் பேறு போன்ற சுப காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும்.
முன்னோர்களின் ஆசி பூரணமாக கிடைக்கும். பல அமாவாசைகளில் முன்னோர் வழிபாட்டைத் தவற விட்டவர்கள் இன்று செய்வதன் மூலம் அந்தக் குறையைப் போக்கிக் கொள்ளலாம். ஆடி அமாவாசை காலத்தில் கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும்.