Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூலத்தை நோக்கச் செய்யும் நாமம்

சென்ற இதழின் தொடர்ச்சி…

இரண்டு நாமங்களான - மூலமந்த்ராத்மிகா -

மூலகூடத்ரயகலேபரா என்பதை பார்க்க இருக்கின்றோம்.

ஒரு மகானின் முன்பு போய் நிற்கிறோம். நமக்குத் தெரியாமல் முற்பிறவியெல்லாம் சொல்கிறார். ஜென்ம ஜென்மாந்திரங்கள் சொல்லுவார். இனி நடக்கப் போவதையும் சொல்வார். இது சித்தி மூலமாக அடையப்படுவதல்ல. இது அவர்களின் சுபாவம். ஏனெனில், காலத்தை கடந்துவிட்டதால் மூன்று காலங்களான நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்கள். அவர்களால் இப்படிப் பார்க்க முடியும். அதனால்தான் பாபா… don’t worry about past. Don’t think about the future. Always live in present. Because present is always omni present. நிகழ்காலம் மட்டுமே இருப்பது.இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவெனில், இந்த ஏகத்துவம், அத்வைதம். அது present. இந்த present க்குள் நாம் இந்த trinity ஐ உண்டாக்கி வைத்திருக்கிறோம். இது கூட தவறுதான். ஈஸ்வரன் உண்டாக்கி வைத்திருக்கிறான். பிரபஞ்ச சிருஷ்டி விஷயங்களுக்காக இப்படி உண்டாக்கி வைத்திருக்கிறான். அதை உண்டாக்கி வைத்திருக்கிற அதே ஈஸ்வரன்தான், அதே அம்பாள்தான் அந்த மும்மைத் தன்மையை கடக்கவும் அருள் செய்வாள். பாபா இன்னொன்றும் சொல்வார். You are not one. But three என்றும் சொல்வார். அந்த மூன்றை பார்த்துவிட்டால் அதை கடந்தால் ஒன்றாக இருப்பதை அறிவீர்கள் என்பார். இதைத்தான் பாபா…. The one who think you are. The one others who think you are, The one really you are. மற்றவர்கள் உங்களை பார்க்கக்கூடியது ஒரு personality. உங்களை நீங்களே பார்த்துக் கொள்வது ஒன்று. உண்மையிலேயே நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதுவொரு personality என்று சொல்வார். இந்த மூன்றில்தான் நாமே இயங்குகிறேன். இந்த மூன்று இயக்கத்தையும் கடந்து செல்லும்போது இயக்கம் எனும் நிலைக்கு போய்விடுகின்றான். இங்கு இயக்கம் என்கிற நிலை எது. சக்தி. அம்பாள். இங்கு அம்பாள் என்ன செய்கிறாளெனில், இந்த மூன்றையும் கடக்க வைக்கிறாள். எப்படியெனில், மூலகூடத்ரயகலேபரா. நாந்தானப்பா… மூன்றாக இருக்கிறேன். அதனால் என்னைப் பிடித்துக் கொள். ஆத்மா என்கிற அம்பாளை பிடித்துக் கொள்ள வேண்டும். த்வைதமும் அவளே. விசிஷ்டாத்வைதமும் அவளே.அத்வைதமும் அவளே. அதனால்தான் விசிஷ்டாத்வைத தத்துவத்தில் மூன்று பொருள் சொல்வது வழக்கமாகும். சித் - அசித் - ஈஸ்வரன். வைஷ்ணவமும் விசிஷ்டாத்வைதம்தான், இன்னொரு வகையில் சைவ சித்தாந்தமும் விசிஷ்டாத்வைதம்தான். ஆனால், விசிஷ்டாத்வைதம் என்பது விசிஷ்டமான அத்வைதம். விசிஷ்டமான என்றால் ஒரு spcialised ஆக இருக்கிறது. ஒரு பொருளை மூன்றாகக் காண்பித்து பிறகு இந்த மூன்றும் ஒன்றுதான் என்று காண்பிப்பது. நேரடியக ஒன்றுதான் என்று காண்பிப்பது அத்வைதம். அங்கு கேள்வியே கிடையாது. ரமண பகவானிடம் கேட்டால் நீ யார் என்று பார் என்று முடித்து விடுவார். இது நேரடியாக அத்வைத காட்டுவார்கள். ஆனால், இன்னும் சிலருக்கு இந்த அத்வைதத்தையே இப்போது பிரபஞ்சத்தில் எப்படி பார்க்கிறோமோ நடைமுறையைக் கொண்டு காண்பிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இந்த மூன்றும் வெவ்வேறு அல்ல. மூன்றும் ஒன்றுதான் என்று காண்பிக்க வேண்டும். விசிஷ்டாத்வைதம், சித் - அசித் - ஈஸ்வரன்… என்று மூன்றாக காட்டுகிறது. சைவ சித்தாந்தம் பதி - பசு - பாசம். அதனால்தான் விசிஷ்டாத்வைத சந்நியாசிகளான ஜீயர், அழகியசிங்கர் போன்றோர் கையில் வைத்துக் கொண்டிருக்கக் கூடிய தண்டத்திற்கு த்ரி தண்டம் என்று பெயர். அத்வைத மட சந்நியாசிகள் வைத்திருக்கக் கூடிய தண்டத்திற்கு ஏக தண்டம் என்று பெயர். விஷயம் ஒன்றுதான். இது விசிஷ்டமான அத்வைதம். மூன்றை காண்பித்து ஒன்றாக காண்பித்தல். த்ரி தண்டம். ஆனால், அத்வைதம் காண்பிக்கும்போது ஒன்றைத்தான் காண்பிக்கும். அதனால் ஏக தண்டம். சந்நியாசிகள் வைத்துக் கொண்டிருக்கக் கூடிய தண்டத்தில் எவ்வளவு பெரிய உண்மையை காண்பித்துக் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள். மூலமந்த்ராத்மிகா என்பது சூட்சுமம். மூல கூடத்ரய கலேபரா என்பது வெளிப்படையான தன்மை ஸ்தூலம். மூல கூட த்ரய கலேபரா என்பது விசிஷ்டாத்வைதம். மூலமந்த்ராத்மிகா என்பது அத்வைதம். இந்த இரண்டையும் இந்த நாமா நமக்கு காண்பித்துக்கொடுக்கின்றது. வித்யா சம்பிரதாயத்தில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். அதாவது காமகலா தியானம். இந்த மூலமந்திரத்தை ஜபம் செய்து, அந்த ஜபத்தால் அம்பாளின் சொரூபத்தை உணர்ந்து இந்த மும்மைத் தன்மையை கடக்கும்போது சொரூபஞானம் சித்திக்கும். இப்படி சொரூபத்தில் சாதகன் நிற்பதை வித்யா காமகலா தியானம் என்று குறிப்பிடும். இந்த நாமங்களுக்கு கோயிலாக கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ள மங்களாம்பிகையைச் சொல்லலாம்.

(சுழலும்...)

ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா