இடைப்பாடி, டிச.12: இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள தண்ணீர்தாசனூர், வட்டராம்பாளையம், ஒக்கிலிபட்டி, கொட்டாயூர், பூமணியூர், மூலப்பாதை, கோனேரிப்பட்டி, காவேரிப்பட்டி, கைக்கோள்பாளையம், அண்ணமார் கோயில், தேவூர், மைலம்பட்டி, செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, கட்சிப்பள்ளி, தங்காயூர், வெள்ளாளபுரம், சமுத்திரம், புதுப்பாளையம், கோரணம்பட்டி, தாதாபுரம், இருப்பாளி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஆரியம், கேழ்வரகு சாகுபடி செய்து வருகின்றனர். வயல்களில் வளர்ந்துள்ள ஆரிய செடிகளை பறித்து, கட்டுகளாக கட்டி விவசாயிகள் வயல்களில் நாற்று நடவும் வேளையில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு சில பகுதியில் உள்ள வயல்களில் மட்டும் தான் ஆரியத்தை நடவு செய்கிறோம். மற்ற பகுதிகளில் நெல், ஆலை கரும்பு, மரவள்ளி, வெண்டை, செங்கரும்பு சாகுபடி செய்கிறார்கள். ஊட்டி, தர்மபுரி, கிருஷணகிரி மாவட்டத்தில் சிறுதானியம் அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். அதேபோல், சேலத்தில் சாகுபடி செய்ய வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
+
Advertisement


